சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்பட 28 பேர் போட்டியிடுகின்றனர்.
ஆர்.கே.நகர் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றிவேல் ராஜினாமா செய்ததையடுத்து அந்த தொகுதிக்கு வரும் 28-ம்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
இதில், முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 32 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. காந்தியவாதி சசிபெருமாளின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் அவர் தேர்தல் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இன்று கடைசி நாள். தமிழ் மாநில கட்சி தலைவர் பால் கனகராஜ் மற்றும் 3 சுயேட்சை வேட்பாளர்கள் மனுக்களை வாபஸ் பெற்றதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. முதலமைச்சர் ஜெயலலிதா, கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
27-ம் தேதி பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடக்கிறது. அன்று பதிவாகும் வாக்குகள் 30-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.













0 thoughts on “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 4 பேர் வாபஸ்: ஜெயலலிதா உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் போட்டி”