BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

பேச்சிப்பாறை - பெரியாறு அணைகளில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, தேனி மாவட்டம் பெரியாறு அணைகளில் இருந்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
 கன்னியாகுமரி மாவட்டம் பேசிப்பாறை பெருஞ்சாணி, சித்தார் 1, சித்தார் 2 அணைகளில் இருந்து கோதையாறு, பட்டணங்கால் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளுக்கு முதல் போக சாகுபடிக்காக பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கைகளை ஏற்று அணைகளில் இருந்து செவ்வாய்க்கிழமை முதல் தண்ணீர் திறந்து விடப்படும்.
 பேச்சிப்பாறை, சித்தார் அணைகள் திறப்பதன் மூலமாக, 79 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், பெரியாறு அணை திறப்பின் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும் என்று தனது அறிவிப்பில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “பேச்சிப்பாறை - பெரியாறு அணைகளில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு