சென்னை அடையாறு காந்திநகரில் பாலவித்யா மந்திர் என்ற தனியார் பள்ளி உள்ளது. இங்கு மாணவர்களிடம் கூடுதலாக கல்வி கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர் புகார் தெரிவித்து கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தினார்கள். பெற்றோருக்கு ஆதரவாக அதே பள்ளியை சேர்ந்த 9 ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்தனர். நேற்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
அதை தொடர்ந்து அடையாறு போலீசார் அங்கு விரைந்து சென்று பெற்றோரிடம் சமரச பேச்சு நடத்தினார்கள். பின்னர், பெற்றோருக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதற்கிடையே பள்ளி முதல்வரை நிர்வாகம் நீக்கி உள்ளது. அதை கண்டித்து இன்று பள்ளியை ஏராளமான பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் நிலவியது. எனவே, பள்ளி முன்பு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.













0 thoughts on “5–வது நாளாக அடையாறு பள்ளியில் பெற்றோர் போராட்டம் ”