ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ ஒருவர், ஆற்றைக் கடக்கும் போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் உப்பு மூட்டை போல சுமந்து அக்கரையில் விட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கால் முட்டி அளவுக்குக் கூட இல்லாத ஆற்று நீரில், பாஜக எம்எல்ஏ நடக்க முடியாமல், அவரை காவலர் ஒருவர் தூக்கிச் சென்றது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இது குறித்து கருத்துத் தெரிவித்த பாஜக எம்எல்ஏ கிரிஷண் லால், இதில் எந்த அதிகாரதுஷ்ப்ரயோகமும் இல்லை, காவல்துறையினர், அரசுக்கு உதவவே உள்ளனர். நான் ஆற்றைக் கடக்க அவர்கள் உதவினர். அவ்வளவே என்று பதில் அளித்துள்ளார்.
Link: http://www.dinamani.com/india/2015/09/11/ஆற்றில்-பாஜக-எம்எல்ஏவை-உப்ப/article3022462.ece













0 thoughts on “ஆற்றில் பாஜக எம்எல்ஏவை உப்பு மூட்டை சுமந்து சென்ற காவலர்: புகைப்படத்தால் பரபரப்பு ”