27, 28 தேதிகளில் திருவாரூரில் கலைஞர் சுற்றுப்பயணம் தி.மு.க. தலைவர் கலைஞர் 20, 21-ந் தேதிகளில் திருவாரூர் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அவரது 2 நாள் நிகழ்ச்சிகள் திடீரென தள்ளி வைக்கப்பட்டது. இப்போது 27, 28 ஆகிய தேதிகளில் திருவாரூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக அவர் சென்னையில் இருந்து வருகிற 26-ந் தேதி இரவு ரெயிலில் புறப்பட்டு 27-ந்தேதி காலை 5.30 மணிக்கு திருவாரூர் சென்றடைகிறார். அங்கு ரயில் நிலையத்தில் கலைஞருக்கு தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு கொடுக்கிறார்கள். பின்னர் அவர் திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் தங்குகிறார். மாலையில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார்.28-ந்தேதி காலை திருவாரூர் வ.கோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனது தொகுதி வளர்ச்சி நிதி மூலம் ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தை கலைஞர் திறந்து வைக்கிறார். பின்னர் திருவாரூர் அருகே உள்ள காட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தனது தொகுதி வளர்ச்சி நிதியின் மூலம் ரூ.19 லட்சத்தில் வகுப்பறை மற்றும் கலையரங்கம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார்.காட்டூரில் உள்ள தனது தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். பிறகு கொரடாச்சேரி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தலா அரை �பவுன் தங்க மோதிரம் பரிசாக வழங்குகிறார். இதைத் தொடர்ந்து கலைஞர் வக்கிரா நல்லூர் ஊராட்சி பூதமங்கலத்தில் தனது தொகுதி வளர்ச்சி நிதியில் ரூ.5.50 லட்சத்தில் கட்டப்பட உள்ள அங்கன்வாடி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அன்று இரவு ரெயிலில் புறப்பட்டு சென்னை திரும்புகிறார்.
Link: http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=151278













0 thoughts on “27, 28 தேதிகளில் திருவாரூரில் கலைஞர் சுற்றுப்பயணம் ”