கூடலூரில் பூத்துக் குலுங்கும் பூமர மலர்களை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவில் தேயிலை பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் மலேரியா கொசுக்களின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஆங்கிலேயர் காலத்தில் தேயிலை செடிகளுக்கு நடுவிலும், நெடுஞ்சாலையின் இருபக்கங்களிலும் பூமரங்கள் நடப்பட்டன.
இந்த மரத்தின் இலைகள் மற்றும் பூக்கள் மலேரியா கொசுக்களை அழிக்கும் தன்மை உள்ளதாக நம்பப்படுகிறது. தற்போது இந்த பூமரங்கள் நன்கு வளர்ந்து அதன் மலர்கள் சிவப்பு கம்பளம் விரித்தது போல காட்சி அளிக்கிறது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
Link: http://www.ns7.tv/ta/node/127536













0 thoughts on “கூடலூரில் பூத்துக் குலுங்கும் பூமர மலர்கள்”