சென்னை, செப்.13- பாரசீக வளைகுடாவில் உள்ள குவைத் நாட்டுக்கு சென்னையில் இருந்து நேற்று மாலை புறப்பட்டு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானத்தை ஓட்டிச் செல்லவிருந்த விமானிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அந்த விமானச் சேவை ரத்து செய்யப்பட்டது. குவைத் செல்லும் வழியில் ஐதராபாத்தில் இறங்க முன்பதிவு செய்திருந்த சில பயணிகள் மட்டும் வேறு விமானங்கள் மூலம் ஐதராபாத் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குவைத் செல்ல முன்பதிவு செய்திருந்த இதர பயணிகளுடன் அதே ஏர் இந்தியா விமானம் சென்னையில் இருந்து இன்று காலை புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Link: http://www.maalaimalar.com/2015/09/13085528/Chennai-Kuwait-Air-India-fligh.html













0 thoughts on “விமானிக்கு திடீர் உடல்நலக் குறைவு: சென்னையில் இருந்து குவைத் செல்லும் விமானம் ரத்து”