உலகின் கடல் பறவைகளில் தொண்ணூறு சதவீதமானவற்றின் வயிற்றுக்குள் சிறிதளவில் ஆவது பிளாஸ்டிக் இருப்பதாகவும், பென்குயின் உட்பட அறுவது சதவீத கடல் பறவைகளின் குடலில் பிளாஸ்டிக் இருப்பதாகவும், ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள் பிளாஸ்டிக் மாசுபாட்டின் தீவிரத்தை பிரதிபலிப்பதாக ஆஸ்திரேலிய காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி கிறிஸ் வில்காக்ஸ், தெரிவித்துள்ளார்.
அரை நூற்றாண்டாக நடந்து வரும் இந்த ஆய்வில், 1960 ஆம் அண்டு ஐந்து சதவீத கடல் பறவைகளின் வயிற்றில் பிளாஸ்டிக் இருப்பதாக கூறப்பட்டது. இந்த சதவீதம் 2010 ஆண்டு 80% கடல் பறவைகளின் வயிற்றில் பிளாஸ்டிக் இருப்பதாக கண்டறியப்பட்டது.
தற்போது இருக்கும் நிலவரப்படி 2050 ஆம் ஆண்டில், 99% கடல் பறவைகளின் வயிற்றில் பிளாஸ்டிக் இருக்கும் என்னும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர் இந்த ஆய்வை நடத்திய ஆய்வாளர்கள். அதுமட்டுமின்றி கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களின் அளவு வருடத்துக்கு எட்டு மில்லியன் டன்கள் என்ற அளவாக அதிகரித்துவிட்டதாகவும் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கடலில் அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுகள், கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், செயற்கை இழை ஆடைகள் போன்றவற்றால்தான் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. மேலும் கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை, உணவுப் பொருட்கள் என எண்ணி பறவைகள் உட்கொள்வதாகவும் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்த அனைத்து உலக நாடுகளும் முன்வரவேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Link: http://www.ns7.tv/ta/node/119396













0 thoughts on “90% கடல் பறவைகளின் வயிற்றில் பிளாஸ்டிக் : அதிர்ச்சி தகவல் ”