கடலோர காவல் படையின், டார்னியர் ரக விமானத்தின் கறுப்பு பெட்டி, இன்று சென்னைக்கு எடுத்து வரப்படுகிறது. அதை, ஆய்வு செய்யும் நிபுணர்களும் இன்று சென்னை வருகின்றனர்.இதுகுறித்து, கடலோர காவல் படை உயர் அதிகாரி கூறியதாவது:கடந்த மாதம் காணாமல் போன, கடலோர காவல் படைக்கு சொந்தமான, டார்னியர் ரக விமானத்தின் உடைந்த பாகங்கள், பிச்சாவரம் அருகே ஆழ்கடலில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தின் கறுப்பு பெட்டியை, இன்று கரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். பின், அது சென்னைக்கு எடுத்து வரப்படும்.அதை ஆய்வு செய்ய, பெங்களூரில் உள்ள, இந்துஸ்தான் ஏரோடைனமிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர் குழு, இன்று சென்னை வருகிறது. கடலுக்கு அடியில், 30 நாட்களுக்கு மேலாக கறுப்பு பெட்டி இருந்ததால், அதன் நிலைமை எப்படி இருக்கிறது என, நிபுணர் குழுவினர் மதிப்பீடு செய்வர்.அதன் பிறகே, கறுப்பு பெட்டியை, டி - கோடு செய்ய, எங்கு அனுப்புவது என்பது பற்றி முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார். Link: http://www.dinamalar.com/news_detail.asp?id=1294804 via http://j.mp/tamil_news
Home
டார்னியர்'' விமான கறுப்பு பெட்டி இன்று சென்னைக்கு வருகிறது சென்னை :
டார்னியர்'' விமான கறுப்பு பெட்டி இன்று சென்னைக்கு வருகிறது சென்னை :
By Unknown 4:32 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “டார்னியர்'' விமான கறுப்பு பெட்டி இன்று சென்னைக்கு வருகிறது சென்னை :”