BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

கட்டாய ஹெல்மெட் உத்தரவு எதிர்த்து அரசு மேல்முறையீடு

கட்டாய ஹெல்மெட் உத்தரவு எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், மதுரை உயர்நீதிமன்ற சங்கம், பெண்கள் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில் ஒரு மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற சங்க தலைவர் பால்கனகராஜ் கூறியது: தமிழகத்தில் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் போலீசார் ஆங்காங்கே சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாதவர்களின் வாகனங்கள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்கிறார்கள். இதனால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் ஹெல்மெட் அணிவது என்பது நடைமுறைக்கு ஏற்புடையதாக இல்லை. நீதித்துறை வரம்பை மீறி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு வழக்கறிஞர்கள் சரியாக தங்களது வாதத்தை எடுத்துச் சொல்லவில்லை. அதனால் தமிழக அரசு கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும். ஹெல்மெட் அணிவதை நாங்கள் எதிர்க்கவில்லை. கட்டாய ஹெல்மெட் என்பதைத்தான் எதிர்க்கிறோம். அதேபோன்று ஆவணங்கள் பறிமுதல் செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை. ஹெல்மெட் அணிவதை பொதுமக்கள் விருப்பத்திற்கு விட்டுவிடவேண்டும். அதேபோன்று மருத்துவசான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு கட்டாய ஹெல்மெட் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “கட்டாய ஹெல்மெட் உத்தரவு எதிர்த்து அரசு மேல்முறையீடு