ஈரோடு, ஜூலை. 3– இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கோர்ட்டு உத்தவிட்டு உள்ளது. இந்த உத்தரவு கடந்த 1–ந் தேதி முதல் அமுலுக்கு வந்து உள்ளது. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து 70 சதவீதத்துக்கு மேல் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர். ஈரோட்டில் இருந்து வெளியூர்களுக்கு செல்பவர்கள் ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தும் இடங்களிலும், பஸ்நிலையம் அருகே உள்ள ஸ்டேண்டுகளிலும் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு செல்வார்கள். இந்த வாகனங்களுக்கு ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள வாகன ஸ்டேண்டுகளில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு ஒரு நாளைக்கு ரூ. 10 வசூலிக்கப்படுகிறது. இரவு 10 மணிக்கு மேல் நிறுத்தி விட்டு மறுநாள் காலை 10 மணிக்கு வந்தால் கூட 2 நாள் வாடகை என்று கட்டணம் வசூல் செய்கிறார்கள், இந்த நிலையில் இப்போது ஹெல்மெட் கட்டாயம் என்று கூறப்பட்டு உள்ளதால் ஹெல்மெட்டுடன் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தங்களது ஹெல்மெட்டுகளையும் வாகன ஸ்டேண்டுகளில் வைத்து விட்டு செல்கிறார்கள். இந்த ஹெல்மெட்டுக்கு ரூ. 5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது போல ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வெளியே உள்ள ஸ்டேண்டுகளிலும், ஈரோடு பஸ் நிலையத்தில் உள்ள ஸ்டேண்டுகளிலும் வாகனம் நிறுத்துவதற்கு ஒரு நாளைக்கு ரூ. 7ம், ஹெல்மெட்டுக்கு ரூ. 5ம் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. ஹெல்மெட் வைப்பதற்கு என்றே அனைத்து ஸ்டேண்டுகளிலும் தனியாக ‘ரேக்’ அடித்து வைத்து உள்ளனர். ஹெல்மெட்டுக்கும் தனியாக கட்டணம் வசூல் செய்வதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் புலம்புகிறார்கள். ஏற்கனவே இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கே கட்டணம் அதிகம் என்ற நிலையில் இப்போது ஹெல்மெட்டுக்கும் தனியாக கட்டணம் கொடுக்கவேண்டி உள்ளதே என்று அவர்கள் புலம்பி தள்ளுகிறார்கள். Link: http://www.maalaimalar.com/2015/07/03165404/Two-wheel-vehicle-stand-parkin.html via http://j.mp/tamil_news
Home
இரு சக்கர வாகன ஸ்டேண்டுகளில் வாகனம் நிறுத்த ரூ.10 கட்டணம்: ஹெல்மெட்டுக்கு ரூ.5 வசூலிப்பு- புலம்பும் மக்கள்
இரு சக்கர வாகன ஸ்டேண்டுகளில் வாகனம் நிறுத்த ரூ.10 கட்டணம்: ஹெல்மெட்டுக்கு ரூ.5 வசூலிப்பு- புலம்பும் மக்கள்
By Unknown 4:19 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “இரு சக்கர வாகன ஸ்டேண்டுகளில் வாகனம் நிறுத்த ரூ.10 கட்டணம்: ஹெல்மெட்டுக்கு ரூ.5 வசூலிப்பு- புலம்பும் மக்கள் ”