சென்னை, ஜூலை 2- சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரெயிலுக்கான கட்டணத்தை 3 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் ரூ.14,600 கோடி செலவில் பணிகள் தொடங்கப்பட்டன. அதில் முதல் கட்டமாக சென்னை கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்தை கடந்த 29-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக இயக்கப்பட்ட அந்த ரெயில் சேவையில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் அதிகமாக இருக்கிறது என்றும், சாதாரண மக்கள் பயணிப்பது மிகவும் சிரமம் என்றும் பயணிகள் தரப்பிலும், அரசியல் கட்சிகள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டன. அதுமட்டுமில்லாமல், கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பயணிகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்த வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையில் சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரெயிலுக்கான கட்டணத்தை 3 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாது என்று சென்னை மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:- மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்த கட்டணத்தின் அடிப்படையிலேயே சென்னை மெட்ரோ ரெயில் சேவைக்கான கட்டணம் 3 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த 3 வருடங்களுக்கு மெட்ரோ ரெயில் கட்டணத்தை மாற்ற முடியாது. டெல்லி மெட்ரோ ரெயில் திட்டம் குறைவான நிதிஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டது. எனவே அதனுடன் சென்னை மெட்ரோ ரெயிலை ஒப்பிட்டு பார்க்க முடியாது. அதேபோல், கொல்கத்தா மெட்ரோ ரெயில் சேவையை, இந்திய ரெயில்வே நிர்வாகம் ஏற்று நடத்துகிறது. சென்னையில் தற்போது அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் திட்டத்தில் 55 சதவீதம் சுரங்கப்பாதை வழியாக ரெயில்கள் செல்வதற்கு வசதியாக கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதை கட்டும் பணிகள், பராமரிக்கும் பணிகள், ரெயிலை இயக்குவதற்கான பணிகள் என அதற்காக செலவழிக்கப்படும் தொகையின் அளவு அதிகம். அதன் அடிப்படையிலே தான் இந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை குறைப்பதால் ஏற்படும் இழப்பை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்றால் அதை குறைக்க வாய்ப்பு இருக்கிறது. அதை தலைமை செயலகம் தான் முடிவு செய்ய வேண்டும். இப்போது நிர்ணயித்த கட்டணத்தை வைத்து ரெயில்களை இயக்கினாலே அடுத்த 10 ஆண்டுகள் வரை மெட்ரோ ரெயில் சேவைகள் நஷ்டத்தில் தான் இயங்கும் நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். Link: http://www.maalaimalar.com/2015/07/02011012/Officer-information-on-metro-r.html via http://j.mp/tamil_news
Home
சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரெயிலுக்கான கட்டணத்தை 3 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாது: அதிகாரிகள் தகவல்
சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரெயிலுக்கான கட்டணத்தை 3 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாது: அதிகாரிகள் தகவல்
By Unknown 3:50 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரெயிலுக்கான கட்டணத்தை 3 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாது: அதிகாரிகள் தகவல் ”