BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

டு பிளெஸ்ஸிஸ் அரை சதம்: தென் ஆப்பிரிக்கா வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி-20 ஆட்டத்தில் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் அரை சதம் விளாச தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. வங்கதேசத்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இரண்டு டி-20, 3 ஒரு நாள் ஆட்டம், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் டி-20 ஆட்டம் டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாப் டுபிளெஸ்ஸிஸ் தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. அதிரடி தொடக்க வீரரான டிவில்லியர்ஸ் (2 ரன்கள்) முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். நிதானமாக ஆடிய கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 61 பந்துகளில் 8 பவுண்டரிகள் உள்பட 79 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த வங்கதேச அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. டு பிளெஸ்ஸிஸ் ஆட்டநாயகனாக தேர்வானார். இரண்டாவது மற்றும் கடைசி டி-20 ஆட்டம் செவ்வாய்க்கிழமை இதே மைதானத்தில் நடைபெறுகிறது. விதிமுறை மாற்றம் அமலுக்கு வந்தது ஒருநாள் போட்டியில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சமீபத்தில் கொண்டுவந்த விதிமுறை மாற்றம் இந்த ஆட்டத்திலிருந்து அமலுக்கு வந்தது. இதன்படி பேட்டிங் பவர்பிளே ரத்து செய்யப்பட்டது. கடைசி 10 ஓவர்களில் 30 யார்டு வட்டத்துக்கு வெளியே 5 ஃபீல்டர்கள் நிறுத்தப்பட்டனர். மேலும் நோ பாலுக்கு ஃப்ரீ ஹிட் வழங்கப்பட்டது. இந்தத் தகவலை ஐசிசியும் உறுதி செய்துள்ளது. Link: http://www.dinamani.com/sports/2015/07/06/டு-பிளெஸ்ஸிஸ்-அரை-சதம்-தென்-ஆ/article2904197.ece via http://j.mp/tamil_news


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “டு பிளெஸ்ஸிஸ் அரை சதம்: தென் ஆப்பிரிக்கா வெற்றி