ஈழப்போர் பிரித்த உறவுகளை 36 வருடங்கள் கழித்து இணைத்து வைத்த வாட்ஸ் அப்! (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஈழப்போரில் பிரிந்த உறவுகளை, 36 வருடம் கழித்து வாட்ஸ் அப் இணைத்து வைத்த சம்பவம் திருச்சிவாசிகளை மட்டுமல்லாது ஈழத்தமிழர் ஆதரவாளர்களையும் நெகிழச்செய்துள்ளது. திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள யோவான் தேவாலயத்திற்கு அருகில் வசித்து வருபவர்கள் சாமுவேல் – சலோமி தம்பதியினர். இவர்களுக்கு யேசுதாஸ் என்கிற மகன் உள்ளார். இவரும், இவரது மனைவி சுகந்தியும் எஸ்.எஸ்.ஏ திட்டத்தில், ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். சாமுவேலுக்கு பூர்வீகம் இலங்கையிலிருக்கும் கண்டி. தனது சிறுவயதில் கண்டியில் வசித்து வந்த சாமுவேல், விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே போர் தீவிரமடைந்த கடந்த 1982-ம் ஆண்டு, தனது தங்கை லீதியாள் மற்றும் குடும்பத்துடன் தமிழகத்திற்கு குடிபெயர்ந்து, திருச்சியில் தங்கிவிட்டார். சாமுவேலின் தங்கை லீதியாளுக்கு, திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வருகிறார். இதனிடையே சாமுவேலுக்கு ஞானப்பூ என்கிற மூத்த சகோதரி இருந்துள்ளார். இலங்கையில் வசித்து வந்த ஞானப்பூவும், அவரது கணவர் ராஜய்யாவும் சாமுவேல் தமிழகம் வருவதற்கு முன்பே 1979ம் வருடம் தமிழகத்திற்கு வந்துவிட்டனர். அவர் எங்கு உள்ளார் என்பது அதன்பிறகு தமிழகம் வந்த ஞானப்பூவின் தம்பி சாமுவேலுக்கு தெரியவில்லை. திருச்சியில் குடியேறிய பிறகு சாமுவேலும், அவரது சகோதரி லீதியாளும் தனது அக்காவையும், அவரது மாமாவையும் தேடி அழைந்தனர். இப்போதுள்ளதைபோல அப்போது தொலைத்தொடர்பு வசதிகள் சரிவர இல்லாத நிலையில், யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் அக்காவின் மீதுள்ள பாசத்தால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் தேடிப்பார்த்தும் ஞானப்பூ பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. காலங்கள் கடந்தன. இந்நிலையில் சாமுவேலின் மருமகள் ஆசிரியர் சுகந்தி, சாமுவேல் படத்தையும், அவர் அக்கா ஞானப்பூவை பற்றிய விபரங்களை தேடி வருவதையும், வாட்ஸ்-அப்பில் போஸ்ட் செய்ததுடன், அவரை பற்றி தகவல் தெரிந்ததால் தொடர்பு கொள்ளும்படியும் தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பினார். கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதும் பரவியது. கூடவே இந்த தகவல், இலங்கையில் உள்ள ஒரு வாட்ஸ் அப் குரூப்பிற்கு ஷேர் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஞானப்பூவை அவரது தம்பி தேடி வருவதாக உறவினர்கள் மூலம், ஞானப்பூவின் மகன் லாசர் என்பவருக்கு தகவல் சொல்லப்பபட்டது. இதையடுத்து லாசர், வாட்ஸ் அப்பில் வந்த செல்போன் எண்ணை கடந்த வெள்ளிக்கிழமை தொடர்புகொள்ள, ஞானப்பூ இலங்கையிலிருந்து தமிழகம் வந்தபோது, குடும்பத்துடன் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள கானம் கிராமத்திற்கு வந்தது தெரியவந்தது. அதன்பிறகு நேற்று ஆறுமுகநேரியிலிருந்து ஞானப்பூ, அவரது மகன்கள் லாசர், ஜெயராஜ் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் திருச்சி வந்தனர். 36 ஆண்டுகளுக்கு பிறகு தம்பி மற்றும் தங்கையை கண்ட ஞானப்பூ பாசத்துடன் உறவுகளை கட்டியணைத்து மகிழ்ச்சியை கொண்டாடினார். இதேபோல் குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்களும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு நலம் விசாரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர். பாசத்தின் அடையாளமாக தங்களுக்குள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி சந்தோசத்தை பறிமாறிக்கொண்டனர். பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த சாமுவேலின் அக்கா ஞானப்பூவின் மகன் லாசர், "எங்கள் தாய் நாடான இலங்கையில் போர் ஆரம்பித்த காலக்கட்டத்தில் எனது தந்தை, அம்மாவுடன் சொந்த ஊருக்கு வந்துவிட்டர். உடன் பிறந்தவர்களை பிரிந்து எங்கம்மா அடிக்கடி தம்பி, தங்கச்சியை பற்றி சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நாங்களும் எங்கெல்லாம் தேடி அழைந்தோம். தகவல் இல்லை. 36 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ் அப் மூலமாக எங்க குடும்பம் சேர்ந்தது ரொம்ப சந்தோசமாக இருக்கு.. எங்கப்பா ராஜய்யா உயிரோடு இருந்திருந்தா கொஞ்சம் நிம்மதியா இறந்திருப்பார். ஆனாலும் இப்போவாவது எனக்கு மாமன், சித்தி கிடைச்சாங்களேன்னு மகிழ்ச்சியாக இருக்கு" என்றார் கண்ணீருடன். அக்காவை சந்தித்த சந்தோசத்தில் சாமுவேல் பேசமுடியாமல் கண்ணீருடன், "வாட்ஸ் அப்பில் இந்த தகவலை பரப்பிய அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்" என கையெடுத்து கும்பிட்டார். எதை எதையோ பார்வேர்ட் செய்கிறவர்கள் இதுபோன்ற பயனளிக்கக்கூடிட தகவல்களையும் பார்வேர்ட் செய்யலாமே...! -சி.ஆனந்தகுமார் படங்கள்: என்.ஜி.மணிகண்டன் Link: http://www.vikatan.com/news/article.php?aid=49083 via http://j.mp/tamil_news
Home
ஈழப்போர் பிரித்த உறவுகளை 36 வருடங்கள் கழித்து இணைத்து வைத்த வாட்ஸ் அப்!
ஈழப்போர் பிரித்த உறவுகளை 36 வருடங்கள் கழித்து இணைத்து வைத்த வாட்ஸ் அப்!
By Unknown 8:28 AM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “ஈழப்போர் பிரித்த உறவுகளை 36 வருடங்கள் கழித்து இணைத்து வைத்த வாட்ஸ் அப்!”