திருப்பூர், ஜூலை 2- ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திருப்பூர் மாநகராட்சி அலுவலக சத்துணவு பெண் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- திருப்பூர் சிறுபூலுவப்பட்டி ஜீவா நகரை சேர்ந்தவர் முத்து (வயது 48). இவருடைய மனைவி சுகந்தி(44). இவர் 15.வேலம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக சுகந்தி கடந்த 30- 11-2014 அன்று இறந்தார். இதைத்தொடர்ந்து சுகந்தி பெயரில் ரூ.1½ லட்சத்துக்கான குழு காப்பீட்டு தொகை பெறுவதற்கு முத்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். மேலும் கலெக்டர் அலுவலகத்திலும் அவர் மனு கொடுத்து முறையிட்டார். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் முத்து, திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள சத்துணவு பிரிவுக்கு சென்று அங்குள்ள அலுவலக பெண் உதவியாளரான சுகுணாவை(54) சந்தித்து தனது மனைவி பெயருக்கு, குழு காப்பீட்டுத்தொகைக்கான காசோலை தயாராகி விட்டதா? என்று கேட்டுள்ளார். ஆனால் காசோலை தயாராக உள்ளதாகவும், அதை வழங்குவதற்கு தனக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும் சுகுணா, முத்துவிடம் கேட்டுள்ளதாக தெரிகிறது. தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று முத்து கூறியுள்ளார். இதனால் தவணை முறையில் பணம் கொடுக்கும்படி சுகுணா தெரிவித்துள்ளார். பின்னர் முதல்கட்டமாக முத்து ரூ.1000-த்தை சுகுணாவிடம் கொடுத்துள்ளார். அதன்பிறகும் சுகுணா மேலும் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முத்து, திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து ரசாயன பொடி தடவிய 2 ஆயிரத்துக்கான ரூபாய் நோட்டுகளை முத்துவிடம் போலீசார் கொடுத்து அனுப்பினார்கள். நேற்றுமுன்தினம் மதியம் முத்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்று அங்கு சத்துணவு பிரிவு அறையில் இருந்த அலுவலக உதவியாளர் சுகுணாவிடம் அந்த ரூ.2 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு ஏற்கனவே மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சுகுணாவை கையும் களவுமாக பிடித்தனர். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுகுணாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுகுணா திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் ஆவார். இந்த சம்பவத்தால் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. Link: http://www.maalaimalar.com/2015/07/02025249/accepting-bribe-nutritional-wo.html via http://j.mp/tamil_news
Home
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சத்துணவு பெண் உதவியாளர் கைது
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சத்துணவு பெண் உதவியாளர் கைது
By Unknown 2:55 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சத்துணவு பெண் உதவியாளர் கைது”