சென்னை, 6 லட்சத்து 15 ஆயிரத்து 518 மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அனைத்துப்பிரிவு மாணவ-மாணவிகளுக்கும் தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவியர் அனைவருக்கும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டம் 2001-2002-ம் கல்வி ஆண்டில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. பின்பு, 2005-2006-ம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் அனைத்துப்பிரிவு மாணவ, மாணவியருக்கும் இத்திட்டத்தின்கீழ் சைக்கிள்கள் வழங்கப்பட்டு மாணவ, மாணவியர் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர். விலையில்லா சைக்கிள்கள் 2015-2016-ம் கல்வியாண்டில், 233 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் 11-ம் வகுப்பு பயிலும் 2,73,592 மாணவர் மற்றும் 3,41,926 மாணவியர் என மொத்தம் 6,15,518 மாணவ-மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, 5 மாணவர்களுக்கு சைக்கிள்களை தலைமைச் செயலகத்தில் வழங்கி, அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டுமென்று வாழ்த்தினார். மாணவ, மாணவியர் சிரமமின்றி பள்ளிக்கு சென்றுவர சைக்கிள்களை வழங்கி வாழ்த்திய முதல்-அமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் என்.சுப்பிரமணியன், கே.சி.வீரமணி, எஸ்.அப்துல் ரகீம், தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் க. அருள்மொழி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். Link: www.DailyThanthi.com/News/State/2015/07/17003429/Bicycles-provide-costfree-program.vpf via http://j.mp/tamil_news
Home
விலை இல்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டம் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
விலை இல்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டம் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
By Unknown 8:52 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “விலை இல்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டம் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்”