BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

கார்டிப், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கார்ப்பில் இன்று தொடங்குகிறது.ஆஷஸ் கிரிக்கெட் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கு ‘ஆஷஸ்’ என்று பெயர். ‘ஆஷஸ்’ கவுரவத்தை தக்க வைக்க இரண்டு அணிகளும் யுத்த களத்தில் சண்டையிடுவது போல் ஆக்ரோஷமாக வரிந்து கட்டி நிற்பார்கள். அதனால் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. 4 ஆண்டுகள் இடைவெளிக்குள் தலா ஒரு முறை இவ்விரு நாடுகளிலும் ஆஷஸ் போட்டி நடைபெறும். கடைசியாக 2013-14-ம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த ஆஷஸ் தொடரை 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றி, இங்கிலாந்தை ‘ஒயிட்வாஷ்’ ஆக்கியது. இந்த நிலையில் அடுத்த ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இப்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடர் மொத்தம் 5 டெஸ்டுகளை கொண்டது. இதன்படி ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் கார்டிப்பில் உள்ள சோபியா கார்டனில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா உலக சாம்பியனான ஆஸ்திரேலியா இந்த ஆண்டில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை வென்று அசத்தியது. பேட்டிங்கில் கேப்டன் கிளார்க், துணை கேப்டன் ஸ்டீவன் சுமித், வார்னர், கிறிஸ் ரோஜர்ஸ், வாட்சன் பந்து வீச்சில் மிட்செல் ஜான்சன், ஹாஸ்லேவுட், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் என்று ஆஸ்திரேலியா வலுவான படையை கொண்டுள்ளது. எனவே ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்த நல்ல வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியா கடைசியாக 2001-ம் ஆண்டு ஸ்டீவ் வாக் தலைமையில் இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் தொடரை வென்றிருந்தது. அதன் பிறகு இங்கிலாந்து தேசத்தில் மறுபடியும் தாக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புடன் ஆஸ்திரேலிய வீரர்கள் வியூகங்களை தீட்டியுள்ளனர். ‘எப்போதும் சொந்த மண்ணில் ஒரு அணியை தோற்கடிப்பது என்பது கடினமான காரியமாகும். இந்த தொடரும் அதற்கு விதி விலக்காக இருக்கப் போவதில்லை’ என்று ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் குறிப்பிட்டார்.இங்கிலாந்து எப்படி? உள்ளூரில் களம் காணுவது இங்கிலாந்துக்கு கொஞ்சம் சாதகமான அம்சம் என்றாலும் அது கூடுதல் நெருக்கடியாகவும் இருக்கும். சிறப்பாக விளையாடினால் மட்டுமே இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக் கேப்டன் பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்கான சூழல் உருவாகும். இங்கிலாந்து வீரர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவரான ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட், ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்வதில் கெட்டிக்காரரான இளம் வீரர் மார்க்வுட் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் மிரட்டினால் நிச்சயம் இங்கிலாந்தின் கை ஓங்கி விடும். எனவே ஆஸ்திரேலியாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. புதிய பயிற்சியாளர் டிரெவர் பெய்லிசின் கீழ் இங்கிலாந்து மீண்டும் தலைநிமிருமா? என்று பார்க்கலாம்.நடுவர் எச்சரிக்கை ‘சிலெட்ஜிங்’ என்ற வார்த்தை மோதலை இவ்விரு அணிகளும் ஒரு யுக்தியாக கடைபிடிப்பது வழக்கம். ஒரு பேட்ஸ்மேன் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடினால், அந்த பேட்ஸ்மேனுக்கு தேவையில்லாமல் கோபமூட்டும் வகையில் வசைபாடுவார்கள். அதனால் ஆத்திரமடையும் பேட்ஸ்மேன், பொறுமை இழந்து ஆட்டம் இழந்து விடும் சம்பவங்கள் நிறைய நிகழ்ந்துள்ளன. இதை கவனத்தில் கொண்டுள்ள ஐ.சி.சி. போட்டி நடுவர் ரஞ்சன் மடுகல்லே, களத்தில் கட்டுக்கோப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்கையும், இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக்கையும் அழைத்து அறிவுரை வழங்கியுள்ளார். அது மட்டுமின்றி பேட்ஸ்மேன் ஆட்டம் இழந்து வெளியேறும் போது அவரை கேலி செய்யும் வகையில் செய்கை காட்டினால், கடும் தண்டனைக்குள்ளாக நேரிடும் என்றும் எச்சரித்து இருக்கிறார். இவ்விரு அணிகளும் இதுவரை 336 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 138-ல் ஆஸ்திரேலியாவும், 105-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. 93 டெஸ்ட் டிரா ஆனது.அணி பட்டியல் போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:- இங்கிலாந்து: அலஸ்டயர் குக் (கேப்டன்), ஆடம் லைத், கேரி பேலன்ஸ், இயான் பெல், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, ஸ்டூவர்ட் பிராட், மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன். ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், கிறிஸ் ரோஜர்ஸ், ஸ்டீவன் சுமித், மைக்கேல் கிளார்க் (கேப்டன்), ஆடம் வோக்ஸ் அல்லது ஷான் மார்ஷ், ஷேன் வாட்சன், பிராட் ஹேடின், மிட்செல் ஜான்சன், மிட்செல் ஸ்டார்க், ஹாஸ்லேவுட், நாதன் லயன். இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. Link: www.DailyThanthi.com/Sports/Cricket/2015/07/08021342/Ikilantuastireliya-iaiyilaaaas-mutalavatu-esiu-toakkamBetween.vpf via http://j.mp/tamil_news


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்