BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

கெஜ்ரிவால் இப்தார் விருந்தில் டெல்லி கவர்னர் பங்கேற்பு

புதுடெல்லி: டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் கொடுத்த இப்தார் விருந்தில் டெல்லி கவர்னர் நஜீப் ஜங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அமைந்தது முதலே அங்கு கவர்னருக்கும் முதல்வருக்கும் இடையே பனிப்போர் உள்ளது. நிர்வாகம், சட்ட ஒழுங்கு, பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்ற போட்டியில் கடந்த சில மாதங்களாக கவர்னர் நஜீப் ஜங், முதல்வர் கெஜ்ரிவால் இடையே கடும் மோதல் காணப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் ஜனாதிபதி, உள்துறை அமைச்சர், பிரதமர் வரை சென்று முறையிட வேண்டிய நிலையும் ஏற்பட்டது. மேலும் கவர்னருக்கு ஆதரவாக உள்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆம் ஆத்மி அரசு நீதிமன்றத்தையும் நாடியது. இதனால் மத்திய அரசுடன் கெஜ்ரிவால் அரசு மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.இந்த சூழலில் தற்போது முஸ்லிம்களின் புனித மாதமான ரம்ஜானை யொட்டி அரசியல் தலைவர்கள் இப்தார் விருந்து அளித்து வருகின்றனர். பீகாரில் லாலு, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்டோர் இன்று இப்தார் விருந்து அளிக்கின்றனர். இதற்கிடையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் டெல்லியில் முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த விருந்தில் எதிரும் புதிருமாக இருந்த கவர்னர் நஜீப் ஜங் கலந்து கொண்டது அனைவர் புருவத்தையும் ஆச்சரியத்தால் உயர்த்தியது. மட்டுமின்றி இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டு ஒன்றாக புகைப்படத்திற்கும் போஸ் கொடுத்தனர். மேலும் கெஜ்ரிவால் விருந்தில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, திரிணாமுல் எம்பிக்கள், போலீஸ் கமிஷனர் பாசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=155664 via http://j.mp/tamil_news


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “கெஜ்ரிவால் இப்தார் விருந்தில் டெல்லி கவர்னர் பங்கேற்பு