திருவனந்தபுரம் : கேரளாவில் பெண் பயணிகளுக்கு பெண்களால் இயக்கப்படும் ஷி - டாக்சி பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து பெண்களுக்கு பஸ் சேவை அளிக்கும் ஷி - பஸ் விரைவில் துவக்கப்பட உள்ளது. கேரள அரசின் சமூக நீதித்துறை அமைச்சகம், தன்னாட்சி அதிகாரத்துடன் இயங்கும் ஜெண்டர் பார்க் அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்பு பெண் பயணிகளுக்கு பெண்களால் இயக்கப்படும் ஷி - டாக்சி சேவையை துவக்கியது. 24 மணி நேரம் பெண்களால் இயக்கப்படும் டாக்சிகளுக்கு கேரளாவில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து பெண் பயணிகளுக்கு பெண் ஓட்டுனர்களை கொண்டு பஸ் சேவை அளிக்க ஜெண்டர் பார்க் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஷி - பஸ் சேவை விரைவில் துவக்கப்பட உள்ளது. ஷி - டாக்சி சேவைக்கு உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. புதிதாக துவக்கப்படும் ஷி - பஸ் சேவைக்கும் உதவுவதாக உலக வங்கி உறுதி அளித்துள்ளது. ஷி - பஸ் குறித்து சமூக நீதித்துறை அமைச்சர் எம்.கே.முனீர், திருவனந்தபுரத்தில், நிருபர்களிடம் நேற்று கூறுகையில், தனியாக செல்லும் பெண்கள் மற்றும் குழுவாக செல்லும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஷி - டாக்சி சேவையை துவக்கினோம். அதற்கு கிடைத்த வரவேற்பால் சமூகத்தின் பெரும்பாலான பெண்களுக்கு உதவும் வகையில் மற்றொரு போக்குவரத்து திட்டத்தை துவக்க முடிவு செய்து உள்ளோம், என்றார். ஜெண்டர் பார்க் தலைமை நிர்வாக அதிகாரி சுனிஷ் கூறுகையில், முதற்கட்டமாக, ஷி - பஸ் சேவை, தலைநகர் திருவனந்தபுரத்தில் துவக்கப்படும். பின் கொச்சி, கோழிக்கோடு ஆகிய நகரங்களில் விரிவுபடுத்தப்படும், என்றார். Link: http://www.dinamalar.com/news_detail.asp?id=1295027 via http://j.mp/tamil_news
Home
கேரளாவில் பெண் பயணிகளுக்கு பெண்கள் இயக்கும் ''ஷி - பஸ்''
கேரளாவில் பெண் பயணிகளுக்கு பெண்கள் இயக்கும் ''ஷி - பஸ்''
By Unknown 7:07 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “கேரளாவில் பெண் பயணிகளுக்கு பெண்கள் இயக்கும் ''ஷி - பஸ்'' ”