வியாழக்கிழமை, 2, ஜூலை 2015 (8:47 IST) சேலம் அருகே ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கொலை; கல்லூரி மாணவர் உள்பட 6 பேர் கைதுசேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது-23). இவர் திருச்சங்கோடு அருகிலுள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தபோது, அதே கல்லூரியில் படித்த வேறு சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், கல்லூரி படிப்பு முடிந்தபின்னரும், அந்த பெண்ணை சந்தித்து வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த 24-ம் தேதி வீட்டிலிருந்து வெளியேறிய கோகுல்ராஜ் 25-ம் தேதி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்திற்கு அருகிலுள்ள கிழக்கு தொட்டிபாளையம் என்ற இடத்தில் ரெயில் தண்டவாளத்தில் தலை துண்டாகி மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.முதலில் தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. தன் மகன் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசில் கோகுல்ராஜின் தாயார் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், திருச்செங்கோடு மலைக்கோவில் கண்காணிப்பு கேமராவில் கோகுல்ராஜ் தன் தோழியுடன் கோவிலுக்குள் சென்றதும், பின்னர் ஒரு கும்பல் கோகுல்ராஜை வெளியே அழைத்து சென்றதும் பதிவானது தெரியவந்தது.இதனால் கோகுல்ராஜின் செல்போனில் இருந்த எண்களை கொண்டு தோழியின் குடும்பத்தினர் மற்றும் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு மறுத்தவர் குழுவினர் கொகுல்ராஜின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தனர். இதற்கிடையே கோகுல்ராஜ் மர்மச்சாவு வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. இது தொடர்பாக 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில், தொடர்புடைய திருச்சங்கோடு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (வயது-21), செல்வராஜ் (வயது-33), சதீஷ் (வயது-25), ரஞ்சித் (வயது-22), சந்திரசேகர் (வயது-44), ஜோதி (வயது-31) ஆகிய 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள யுவராஜ், அருண், சிவக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். முன்னதாக கோகுல்ராஜ் சாவை கொலை வழக்காக போலீசார் பதிவு செய்து குற்றவாளிகளை கைதுசெய்ய வலியுறுத்தி அவருடைய உறவினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடந்த 28–ந் தேதி முதல் 4 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.இந்த வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுத்ததை அடுத்து நேற்று மாலை உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது. 6 நாட்களாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ள கோகுல்ராஜ் உடலை இன்று (வியாழக்கிழமை) பெற்றுக்கொள்ள உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.கோகுல்ராஜ் உடலை பெறுவதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சேலத்துக்கு இன்று வருவதாகவும், அவருடைய தலைமையில் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளதாகவும் அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வன்னி அரசு தெரிவித்தார் Link: http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=146075 via http://j.mp/tamil_news
Home
சேலம் அருகே ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கொலை; கல்லூரி மாணவர் உள்பட 6 பேர் கைது
சேலம் அருகே ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கொலை; கல்லூரி மாணவர் உள்பட 6 பேர் கைது
By Unknown 8:49 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “சேலம் அருகே ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கொலை; கல்லூரி மாணவர் உள்பட 6 பேர் கைது”