BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

சென்னையில் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

​சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக ஐந்து அலகுகளிலும் 450 மெகா வாட் மின்உற்பத்தி முடங்கியுள்ளது. இதன் காரணமாக, சென்னையில் மின்தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வரும் எண்ணூர் அனல்மின் நிலையத்தில் 5 யூனிட்டுகளில் 450 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.  இதில் பழுது காரணமாக ஏற்கனவே இரண்டு யூனிட்டுகள் மூடப்பட்டன. கடந்த 3 நாள்களுக்கு முன்பு மேலும் அலகில் மின்உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில், அலகு  இரண்டு மற்றும் மூன்றில் காற்றை வெளியேற்றும் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறால்  தற்போது அங்கு ஐந்து அலகுகளிலும் 450  மெகா வாட் மின்  உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் சென்னையில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.முப்பது ஆண்டுகள் மட்டுமே செயல் படக்கூடிய எண்ணூர் அனல் மின் நிலையம் அதன் ஆயுள் காலத்தை விட கூடுதலாக 15 ஆண்டுகள் செயல்பட்டு வந்துள்ளது.  தமிழகத்திலேயே முதன் முதலில் 450 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என்ற பெருமையை கொண்ட எண்ணூர் அனல் மின் நிலையம் தற்போது முற்றிலுமாக முடங்கி விட்ட நிலையில் அதன் அருகே 660 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்க்கான  விரிவாக்க திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அதன் பணிகள் தற்போது  மந்தமாக நடைபெறுவதால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாட்டை போக்க  அதன் கட்டுமானப் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டுமென தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்  Link: http://www.ns7.tv/ta/node/81111 via http://j.mp/tamil_news


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “சென்னையில் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்