ஆம்பூரில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தை தொடர்ந்து, ஆம்பூர், வாணியம்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகொண்டா குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பவித்ரா (26). இவர் மே மாதத்தில் காணாமல் போனது தொடர்பாக, ஆம்பூர் பூந்தோட்டம் பர்ணாகார தெருவைச் சேர்ந்த ஷாஜகான் மகன் ஷமில் அஹமதை (27), பள்ளிகொண்டா போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து, அவர் காயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஜூன் 26-ஆம் தேதி மாலை இறந்தார். இதையடுத்து, ஆம்பூர் நகரக் காவல் நிலையம் முற்றுகை, தேசிய நெடுஞ்சாலையில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை முஸ்லிம் அமைப்புகள் நடத்தின. அப்போது போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் காயம் அடைந்தனர். வன்முறைக்குக் காரணமான 130-க்கும் மேற்பட்டோரை போலீஸார் இதுவரை கைது செய்துள்ளனர். இவர்களை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சியினர் கடந்த 4-ஆம் தேதி ஆம்பூரில் முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்தினர். இந்த நிலையில், பவித்ராவை தனிப்படை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். இந்த நிலையில், இந்து முன்னணி சார்பில் ஜூலை 7-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்தது. இதேபோல பல்வேறு இந்து அமைப்புகள் சார்பாக போராட்டம் நடத்த அனுமதி கேட்டும், தலைவர்கள் ஆம்பூருக்கு வருகை தந்து நிலைமையை அறிய அனுமதி கேட்டும் போலீஸாரிடம் கடிதம் கொடுத்திருந்தனர். இவ்வாறு அனுமதி கொடுக்கும்பட்சத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கலாம் என்ற முன்னெச்சரிக்கையின் அடிப்படையில் , ஆம்பூர், வாணியம்பாடியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கும்படி திருப்பத்தூர் வருவாய்க் கோட்ட அலுவலர் ரெங்கராஜனுக்கு காவல் கண்காணிப்பாளர் பி.கே. செந்தில்குமாரி கடிதம் அனுப்பினார். இதையடுத்து, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144(1) கீழ் அமைதியை நிலைநாட்டவும், மக்களைப் பாதுகாக்கவும், சமூக நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும். அரசியல் கட்சிகளின் மௌனம் கலைய வேண்டும்: வானதி சீனிவாசன் ஆம்பூர் வன்முறைச் சம்பவம் குறித்து அரசியல் கட்சிகளின் மௌனம் கலைந்து, கருத்து தெரிவிக்க வேண்டும் என பாஜக மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தினார். கோவையில் இருந்து சென்னைக்குச் செல்லும் இன்டர்சிட்டி ரயிலில், ஆம்பூர்-காட்பாடி இடையேயான பயணத்தில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது: ஆம்பூர் வன்முறை குறித்து பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு காரணமான எம்எல்ஏவை கைது செய்ய வேண்டும். இந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.காவலர்கள் முதல் காவல் கண்காணிப்பாளர் வரை தாக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பெண் காவலர்கள் மோசமாக நடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசு உதவிபுரிய வேண்டும். பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் அச்சத்தில் உள்ளனர் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், ஆம்பூரில் இந்து சமுதாய மக்கள் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து எந்த ஒரு அரசியல் கட்சியும் குரல் கொடுக்காமல் மௌனம் காக்கின்றனர். இதனால் சட்டம் மதம் சார்ந்ததாக இருக்கின்றதோ என்ற எண்ணம் இந்துக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்றார். Link: http://www.dinamani.com/tamilnadu/2015/07/07/ஆம்பூர்-வாணியம்பாடியில்-144-தட/article2906731.ece via http://j.mp/tamil_news
Home
ஆம்பூர், வாணியம்பாடியில் 144 தடை உத்தரவு
ஆம்பூர், வாணியம்பாடியில் 144 தடை உத்தரவு
By Unknown 5:30 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “ஆம்பூர், வாணியம்பாடியில் 144 தடை உத்தரவு ”