மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் இந்த ஆண்டு காலதாமதமாக தொடங்கியது. கடந்த மூன்று நாட்களாக குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மேலும் தொடர் மழை காரணமாக குண்டாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த நிலையில் நேற்று சாரல் மழை பெய்த வண்ணமாக இருந்தது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. நேற்று ரம்ஜான் விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்து குளித்து மகிழ்ந்தனர். பழைய குற்றாலம் அருவியிலும் ஆயிரக்கணக்கானோர் குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி இல்லாத செண்பகாதேவி அருவி, தேன் அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. Link: http://www.ns7.tv/ta/node/87468 via http://j.mp/tamil_news
Home
குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
By Unknown 11:42 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி ”