BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

பேரீத்தம்பழத்தின் பயன்கள்



மேற்கண்ட இந்த தகவல்கள் மூலம்  அல்லாஹ் மர்யம் அலை சலாம் அவர்களுக்கு எவ்வளவு உள்ளார்ந்த ஞானமிக்க ஆலோசனைகளையும் நற்செய்திகளையும் வழங்கியுள்ளான் என்பதையும் நம்மால் எளிதில் தெரிந்து கொள்ள முடிகின்றது .மனிதன் பேரித்தம் பழங்களையும் நீரினை மட்டுமே உட்கொண்டுஆண்டுகள் பல வாழ முடியுமென்றும்  , இவை இரண்டிலும் மனிதன் வாழ்வதற்குத் தேவையான அனைத்துவிதமான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன என்றும் அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.    V..H .W DOWSON என்ற அறிவியல் அறிஞர் தன் ஆய்வில்  நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒரு  கோப்பை பாலும் ஒரு பேரித்தம் பழமும் ஒரு நாள் முழுவதிற்குமான அனைத்து சத்துக்களையும் தரவல்லது என்று கூறுகின்றார்.

பேரித்தம் பழத்தில்  பல்வேறு வைட்டமின்கள்  அடங்கியுள்ளன. உதாரணமாக, பீட்டா கரோட்டின், (B1, B2, B3 மற்றும் B6) மற்றும் பலகனிமங்கள், (சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம்,நார்ச்சத்து, இரும்பு, கந்தகம், பாஸ்பரஸ், மற்றும் குளோரின்) மற்றும் கொழுப்பு, மற்றும் புரதம் போன்றவகையான சத்துக்களும் அதிகம் அடங்கியுள்ளன .இன்னும் சில முக்கியமான நன்மைகளையும் காணலாம்.

ஒரு பேரித்தம் பழத்தின்  ஊட்டச்சத்து மதிப்பு,  கனிமங்களுக்கிடையேயான   சமநிலையை  அடிப்படையாகக் கொண்டது.  இந்த பழம் அதிக பொட்டாசியம் உள்ளடக்கத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.  மேலும் இது உடலின் தண்ணீர் அளவை பாதுகாக்கின்றது.

இரும்புச்சத்து குழந்தையின் வளர்ச்சிக்கு மிக இன்றியமையாதது ஆகும். இது இரத்தத்தின் சிவப்பணுக்களில் உற்பத்தியைஅதிகப்படுத்தி அதனை ஒழுங்குபடுத்துகின்றது. மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கிறது. பேரித்தம் பழத்தின் உயர் இரும்பு உள்ளடக்கத்தின்  காரணமாக,ஒன்றரை (1 1 /2 ) பேரித்தம் பழமானது  உடலுக்குத் தேவையான மொத்த இரும்புச்சத்துத் தேவையையும்  பூர்த்தி செய்கின்றது.இதனால் இரும்புச்சத்து பற்றாக்குறையினால்  ஏற்படும் அனைத்து நோவினைகளையும் தவிர்க்க முடியும். நம் உடலின் எலும்புகளுக்கு வலு சேர்க்க உதவும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவையும் பேரீத்தம்பழங்களில் காணப்படுகின்றன.

நம் உடலில் உள்ள நரம்புகள் ஆரோக்கியமாகச் செயல்படுவதற்குத் தேவைப்படும் விட்டமின் B1 மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துகளும் பேரீச்சையில் மிகுந்து காணப்படுகிறது. இதனை பெர்க்லி பல்கலைக்கழகத்தில் ஆராய்ந்து உறுதிப்படுத்தியுள்ளனர். மெக்னீசியம் சிறுநீரகத்தின் சீரிய செயல்பாட்டிற்கும் உதவுகிறது. பேரீத்தம்பழம் உடல் நலத்திற்கும் மட்டுமின்றி, மன உளைச்சலையும் கட்டுப்படுத்துகிறது.

பேரித்தம் பழத்தில் புதிய இரத்த அணுக்கள் உருவாக்கவும் மற்றும்  அமினோ அமிலங்களை  உற்பத்தி செய்யவும் மற்றும் புதிய செல்களை வளர்க்கும் முக்கிய தாதுக்கள் உள்ளன. இவை கர்ப்பிணி  பெண்களுக்கு  அத்தியாவசியமான   ஃபோலிக் அமிலத்தினை  (விட்டமின் B9), கொண்டிருக்கின்றன. ஒரு கர்ப்பிணி பெண்ணுக்குத்  தினசரி  இரு மடங்கு ஃபோலிக் அமிலம்  தேவைப்படுகின்றது . உடலின் ஃபோலிக் அமில அளவு குறைபடுமானால் சிவப்பு இரத்த அணுக்கள் குறைவாகி   இரத்த சோகை நோயினை ஏற்படுத்துகின்றது . அநேகப் பழங்களை விடவும் பேரீத்தம்பழத்தில் அதிகளவு புரதமும் விட்டமின் A வும்உள்ளது.

ஆக்ஸிடாஸின், என்ற மருந்து வகை நவீன மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது இது "விரைவான பிரசவத்திற்கும், குழந்தை பிறந்ததும் தேவைப்படும் தாய்பால்  உற்பத்தி அளவு அதிகரிக்கவும் உதவுகிறது.

நபி (ஸல்)  அவர்கள், ஒரு வீட்டில்  பேரித்தம் பழம் இருந்தால் அவர்கள் பசித்தவர்களாக மாட்டார்கள் என்று பேரித்தம் பழத்தின் சிறப்பினை கூறியிருக்கிறார்கள் .

பேரித்தம் பழத்தின் மேற்கண்ட  அனைத்து  நன்மைகளும் அல்லாஹ்வின் அருளால் மர்யம் அலை அவர்களுக்கு நற்செய்தியாகக் கூறப்பட்டு ,மர்யம் அலை அவர்களின் பிரசவத்தை எளிதாக்கி நபி ஈஸா அலை அவர்கள் எளிய முறையில் பிறக்க வழிவகை செய்தது (அவனே நன்கறிந்தவன் ).


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “பேரீத்தம்பழத்தின் பயன்கள்