சென்னை, தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு பவுன் ரூ.19,832–க்கு விற்பனை செய்யப்பட்டது.தொடர் சரிவு தங்கம் விலை தொடர் சரிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. நேற்றும் தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ20–ம், பவுனுக்கு ரூ.160–ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 479–க்கும், ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்து 832–க்கும் விற்பனை செய்யப்பட்டது.தங்கம் விலை குறையும் போதெல்லாம், வெள்ளியின் விலையும் குறையும். ஆனால் நேற்று வழக்கத்திற்கு மாறாக தங்கம் விலை குறைந்து, வெள்ளியின் விலை உயர்ந்து காணப்பட்டது. கிராமுக்கு 20 காசும், கிலோவுக்கு ரூ.205–ம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.35 ஆயிரத்து 985–க்கு விற்பனை ஆனது.கடந்த 4 நாட்களில்... தங்கம் விலை 3 மாதங்களுக்கு பிறகு, கடந்த மாதம் (ஜூன்) 26–ந்தேதி ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்துக்கு கீழ் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் மறுநாளே மீண்டும் தங்கம் விலை உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரத்தை தாண்டியது.அதன் பின்னர், கடந்த மாதம் 29–ந்தேதியில் இருந்து தங்கம் விலை சரிய தொடங்கி நேற்று முன்தினம் (புதன்கிழமை) மீண்டும் ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இதுகுறித்து சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறியதாவது:–பொருளாதார நெருக்கடி கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, உலக பொருளாதாரத்தில் தங்கத்தின் மதிப்பு குறைந்துள்ளது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து சரிவை நோக்கி செல்கிறது. கடந்த ஒரு வாரத்தில் 1,200 டாலருக்கு விற்பனையான ஒரு அவுன்ஸ் (31.1 கிராம்) தங்கம், தற்போது 1,160 டாலருக்கு விற்பனை ஆகிறது.வருகிற 6–ந்தேதிக்கு மேல் தான் தங்கத்தின் விலை நிலையான நடைமுறைக்கு வரும். தங்கத்தின் மீது முதலீடு குறைந்து, வெள்ளியின் மீது முதலீடு அதிகரித்ததன் காரணமாக, தங்கம் விலை குறைந்தும், வெள்ளி விலை அதிகரித்தும் காணப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.--–செய்திஎண்15–36பாயிண்ட் பார்ஆல் Link: www.DailyThanthi.com/News/State/2015/07/03054425/Continuous-decline-the-price-of-gold-to-Rs160-per.vpf via http://j.mp/tamil_news
Home
தொடர் சரிவு: தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.160 குறைந்தது ஒரு பவுன் ரூ.19,832–க்கு விற்பனை
தொடர் சரிவு: தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.160 குறைந்தது ஒரு பவுன் ரூ.19,832–க்கு விற்பனை
By Unknown 6:40 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “தொடர் சரிவு: தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.160 குறைந்தது ஒரு பவுன் ரூ.19,832–க்கு விற்பனை”