COMPANY – AL AHAMADIYA (KSCC) INTERVIEW AT MADURAI ON 05.09.15
S.NO POSITION NO'S SALARY
1.
CIVIL FOREMANS 50 250 KD
2.
CARPENTERS 100 100 KD
3.
STEEL FIXERS 200 100 KD
4.
MASONS 60 100 KD
5.
LABOURS 150 70 KD
6.
AMBULANCE DRIVERS 10 150 KD
7.
RIGGERS 50 85 KD
8.
CLEANERS 20 80 KD
9.
LAUNDRY MENS 20 80 KD
10.
SECURITY GUARDS 20 100 KD
11.
PLUMBERS 20 150 KD
12.
ELECTRICIANS 20 150 KD
13.
DIESEL MECHANIC 20 150 KD
14. GARDNERS 20 120 KD
FREE FOOD & ACCOMMODATION
REGARDS,
ATC
Oman national Gulf Mineral and Mining company Interview at TRICHY on 2/9/15
(tiles and marbles )
packing worker
message me passport number , this company name and cell number to get interview address....8098763282
ஜீவாமிர்தம் இயற்கையான நுண்ணுயிர் கலவை
ஜீவாமிர்தம் எப்படி தயாரிப்பது?
தேவையான பொருட்கள்:
நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் சாணம் 5 கிலோ (அ) நாட்டு எருமைமாட்டுச்சாணம் 5 கிலோ) நாட்டு பசுங்கோமியம் 5 முதல் 10 லிட்டர் (அல்லது நாட்டு பசுங்கோமியம் பாதி அளவு + (அ) நாட்டு காளைமாட்டு கோமியம் (அ) நாட்டு எருமைமாட்டு கோமியம், வெல்லம் (கருப்பு நிறம்) 2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர், இரு விதை இலைத் தாவரங்களின் தானிய மாவு 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து) பண்ணைகளின் வரப்பிலிருந்து எடுக்கப் பட்ட காட்டின் (ஜீவனுள்ள) மண் கையளவு மற்றும் தண்ணீர் 200 லிட்டர் (குளோரின் கலக்காதது)
தயாரிப்பு முறை
நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் சாணம் 5 கிலோ (அ) நாட்டு எருமைமாட்டுச்சாணம் 5 கிலோ) நாட்டு பசுங்கோமியம் 5 முதல் 10 லிட்டர் (அல்லது நாட்டு பசுங்கோமியம் பாதி அளவு + (அ) நாட்டு காளைமாட்டு கோமியம் (அ) நாட்டு எருமைமாட்டு கோமியம், வெல்லம் (கருப்பு நிறம்) 2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர், இரு விதை இலைத் தாவரங்களின் தானிய மாவு 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து) பண்ணைகளின் வரப்பிலிருந்து எடுக்கப் பட்ட காட்டின் (ஜீவனுள்ள) மண் கையளவு மற்றும் தண்ணீர் 200 லிட்டர் (குளோரின் கலக்காதது)
இவற்றைத் தொட்டியில் விட்டு கலக்க வேண்டும் தினமும் 3 முறை 3 நாட்களுக்கு தவறாமல் கலக்கி விடவேண்டும். ஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான் நுண்ணுயிரிகள் இருக்கின்றன் .ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் இந்த நுண்ணுயிரிகள் இரட்டிப்பு அடைகின்றன்.
இந்த நுண்ணுயிர் கலவைதான் ஜிவாமிர்தம்.
பயன்படுத்தும் முறை
ஜிவாமிர்தம் எல்லா வகை பயிர்களுக்கும் நீரில் கலந்து பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.
ஜீவாமிர்தம் எப்படி பயன்படுத்துவது?
தெளிப்புக்காக எடுக்கும்போது கரைசலின் மேற்புறத்தில் இருக்கும் தெளிவை மட்டும் எடுத்து வடிகட்டிப் பயன்படுத்த வேண்டும் .ஒவ்வொரு பயிருக்கும் குறிப்பிட்ட அளவு வடிகட்டிய ஜீவாமிர்தத்தை குறிப்பிட்ட அளவு நீரில் கலந்து தெளிக்க வேண்டும் .அதேபோல் காய் பிடிக்கும் சமயத்தில் புளித்தமோர் ,முளைகட்டிய தானியக் கலவை ,தேங்காய்த் தண்ணீர் ஆகியவற்றையும் தெளிக்க வேண்டும் .இது அனைத்துப் பயிர்களுக்கும் பொருந்தும் .
ஒரு ஏக்கருக்குத் தெளிப்பதற்குத் தேவையான் அளவுகள்
4 மாதப் பயிர்கள் (120 நாட்கள் )
15 -ம் நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100 லிட்டர் தண்ணீர்.
30 -ம் நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150 லிட்டர் தண்ணீர்.
60 -ம் நாளுக்கு மேல்,20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.
90 -ம் நாள் அல்லது வதை பால் பிடிக்கும் தருணத்தில் 5 லிட்டர் புளித்த மொருடன் 200 லிட்டர் தண்ணீர்.
6 மாதப் பயிர்கள் (180 நாட்கள் )
30 -ம் நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100 லிட்டர் தண்ணீர்.
60 -ம் நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150 லிட்டர் தண்ணீர்.
90 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.
120-ம் நாளில் 5 லிட்டர் புளித்த மொருடன் 200 லிட்டர் தண்ணீர்.
150 -ம் நாளில்,10 லிட்டர் முளைகட்டிய தானியக் கரைசலை 30 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.
ஓர் ஆண்டு பயிர்களுக்கு
30 -ம் நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100 லிட்டர் தண்ணீர்.
60 -ம் நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150 லிட்டர் தண்ணீர்.
90 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.
120-ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.
150 -ம் நாளில் 5 லிட்டர் புளித்த மொருடன் 200 லிட்டர் தண்ணீர்.
180 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.
210 -ம் நாளில் 2 லிட்டர் தேங்காய்த் தண்ணீருடன் 200 லிட்டர் தண்ணீர்.
240 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.
270 -ம் நாளில் 10 லிட்டர் முளைகட்டிய தானியக் கரைசலை 30 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.
அதன் பிறகு மாதந்தோறும் 30 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும் .
பழ மரங்களாக இருப்பின் காய்கள் முதிர்ச்சி பெறுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு 2 லிட்டர் தேங்காய்த் தண்ணீருடன் 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்.
ஜீவாமிர்தம் நன்மைகள் என்ன?
ஜிவாமிர்தம் பாய்சசப்படும் பயிர்களை எந்த நோயும் தாக்காது.
ஜிவாமிர்தம் நீரில் கலந்து பயன்படுத்தும் போது மண்புழுக்கள் வரவு அதிகரிக்கிறது .
ஜிவாமிர்தம் அனைத்து வகை மண்ணையும் சத்துநிறைந்த மண்ணாக மாற்றிவிடுகின்றது.
ஜிவாமிர்தம் நுண்ணுயிர்களின் வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்கிறது.
ஜீவாமிர்தக் கரைசலுடன் மூலிகைப் பூச்சிவிரட்டி, அக்னி அஸ்திரம், நீம் அஸ்திரா ஆகியவற்றை கலந்து பயன்படுத்தலாமா?
ஜீவாமிர்தம் என்பது மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை பெருக்க உதவும் பொருள். அஸ்திரம் என்பது பூச்சிவிரட்டியாகப் பயன்படுத்தப்படும் பொருள். எனவே எதிர்மறையான இரண்டு பொருட்களையும் ஒன்றாகக் கலக்கக் கூடாது. வேலை குறையட்டும் என்று எல்லாவற்றையும் ஒன்றாகச் செய்யாதீர்கள்.
LIVE CRICKET
SL v IND, 3rd Test: SL 200/9(51.5 ov) IND: 312 N Pradeep: 1 (4) Dhammika Prasad*: 27 (21) Day 3: 3rd Session - SL trail by 112 runs.
LIVE CRICKET
SL v IND, 3rd Test: SL 102/6(29.2 ov) IND: 312 K Perera: 33 (40) Herath*: 19 (26) Day 3: 2nd Session - SL trail by 210 runs.
LIVE CRICKET
LIVE CRICKET
SL v IND, 3rd Test: SL 80/6(24.4 ov)
IND: 312
K Perera: 20 (26)
Herath*: 11 (12)
Day 3: 2nd Session - SL trail by 232 runs.
செவ்வாய் கிரகம் செல்வோருக்கு தனி அறைக்குள் பயிற்சி
வாஷிங்டன், ஆக. 30–
செவ்வாய் கிரகம் செல்வோருக்கு தனி அறைக்குள் அடைத்து ‘நாசா’ மையம் பயிற்சி அளிக்கிறது.
வருகிற 2030–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப ‘நாசா’ திட்டமிட்டுள்ளது. அதற்கு தகுந்தாற்போன்ற சூழ்நிலையில் மனிதர்கள் வாழ பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதற்காக அமெரிக்காவில் ஹவாயில் உள்ள மவுனா லோவா எரிமலை பகுதியில் கூண்டு போன்ற பிரத்யேக அறை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அறை 20 அடி உயரம் மற்றும் 36 அடி அகலத்தில் உள்ளது.
இதற்கு ‘ஹி–சீஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. அதில் 6 பேரை தங்க வைத்து செவ்வாய் கிரகத்தில் வாழும் சூழ்நிலை பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.
அதில் ஜெர்மனியைச் சேர்ந்த இயற்பியல் நிபுணர், அமெரிக்காவைச் சேர்ந்த விமானி, கட்டிட கலை நிபுணர், பத்திரிகையாளர், மண்ணியல் விஞ்ஞானி மற்றும் பிரான்சை சேர்ந்த நிபுணர் என 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்கள் 6 பேரும் ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை இந்த அறையில் தங்குகின்றனர். எனவே, நேற்று இவர்களுக்கு பிரிவுபசார விழா நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட கூண்டு அறைக்குள் சென்று தங்கினர்.
அங்கு தங்குபவர்களில் 3 பேர் ஆண்கள் மற்றும் 3 பேர் பெண்கள் ஆவர். அவர்கள் தூங்குவதற்கு சிறிய கட்டிலும், உட்காருவதற்கு மேஜையுடன் கூடிய நாற்காலியும் வழங்கப்பட்டுள்ளது. சாப்பிடுவதற்கு அதிக சக்தி தரும் நெய் உள்ளிட்டவை உணவு பொருளாக வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 2 குழுக்களை சேர்ந்தவர்கள் 4 மாதம் மற்றும் 8 மாதங்கள் தங்கி பயிற்சி பெற்றுள்ளனர். தற்போது தான் நீண்ட நாட்கள் பயிற்சி பெற 6 பேர் கொண்ட குழு கூண்டு அறைக்குள் சென்றுள்ளனர்.
Link: http://www.maalaimalar.com/2015/08/30112756/Nasa-starts-year-long-isolatio.html
சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவரை பூட்ஸ் காலால் மிதித்த போலீசார்
நகரி, ஆக. 30–
ஆந்திராவில் தனியார் பல்கலைக்கழகம் தொடங்க முதல்–மந்திரி சந்திரபாபு முடிவு செய்து உள்ளார்.
விஜயவாடாவில் உள்ள முதல்–மந்திரி அலுவலகத்தில் நேற்று சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இதுபற்றிய தகவல் வெளியானதும் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக பல்வேறு மாணவர் சங்க அமைப்பினர் அமைச்சரவை கூட்டம் நடந்த முதல்–மந்திரி அலுவலகத்தை நோக்கி திரண்டனர். அலுவலகத்தை முற்றுகையிட்டு தனியார் பல்கலைக்கழகம் தொடங்க எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
ஆந்திராவில் நேற்று ஒய்.எஸ்.அர். காங்கிரஸ் கட்சியினர் பந்த் போராட்டம் நடத்தினார்கள். இதன் காரணமாக முதல்–மந்திரி அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாணவர்கள் திரண்டு வருவதை அறிந்ததும் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர்.
அலுவலகத்தை முற்றுகையிட வந்த மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினார்கள். போலீசாரின் தாக்குதலில் மாணவர் கூட்டமைப்பு சங்கத்தின் விஜயவாடா நகர செயலாளர் வசந்த் கீழே விழுந்து காயம் அடைந்தார். அவரது முகத்தை போலீசார் ஒருவர் பூட்ஸ் காலால் மிதித்தார். இதை கண்ட மாணவர்கள் கொந்தளித்தனர். போலீசுக்கு எதிராகவும், அரசின் முடிவுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
நிலைமை மோசமாகவே போராட்டம் நடத்திய மாணவர்கள் பலரை போலீசார் கைது செய்தனர்.
Link: http://www.maalaimalar.com/2015/08/30113355/fight-against-Chandrababu-Naid.html
பாசனத்திற்காக 16500 கனஅடி திறப்பு: வேகமாக குறையும் மேட்டூர் அணை நீர்மட்டம்
மேட்டூர்,ஆக.30–
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 12 ஆயிரத்து 809 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று ஒரே நாளில் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் குறைந்து அணைக்கு விநாடிக்கு 7 ஆயிரத்து 368 கன அடி தண்ணீர் குறைந்து வந்தது. இன்று காலை மேலும் ஆயிரம் கன அடி தண்ணீர் குறைந்து விநாடிக்கு 6 ஆயிரத்து 480 கன அடி தண்ணீர் வருகிறது.
இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக விநாடிக்கு 13 ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது பாசன தேவையை கருத்தில் கொண்டும், தண்ணீர் அதிகமாக திறந்து விடவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றும் அணையில் இருந்து மேலும் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் கூடுதலாக திறந்து விடப்பட்டுள்ளது. மொத்தம் விநாடிக்கு 16 ஆயிரம் 500 கன அடி வீதம் தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
அணைக்கு வருகிற தண்ணீரின் அளவை விட திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டமும் வேகமாக சரிந்து கொண்டே வருகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 93.10 அடியாக இருந்தது. மேலும் ஒரு அடி குறைந்து இன்று அணையின் நீர் மட்டம் 92.46 அடியாக உள்ளது. இதே நிலை நீடித்தால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விடும் என்ற நிலை உருவாகி உள்ளது.
Link: http://www.maalaimalar.com/2015/08/30102846/16500-cubic-feet-of-irrigation.html
பெரிய இன்னிங்ஸ் விளையாடுவேன் என்று டிராவிட் நம்பிக்கை கொடுத்தார்: புஜாரா சொல்கிறார்
கொழும்பு, ஆக. 29- கொழும்பில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்த நிலையிலும், தொடக்க வீரர்கள் காயம் காரணமாக அணியில் இடம்பெற்ற புஜாரா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அத்துடன் இந்தியாவின் ஸ்கோரை 292 ரன்னாக உயர்த்த முக்கிய காரணமாக இருந்தார். இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 135 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் உள்ளார். தனது சிறப்பான இந்த சதம் குறித்து அவர் கூறுகையில், ‘‘நான் இந்தியா ஏ அணியில் விளையாடிக்கொண்டிருக்கும்போது டிராவிட்டிடம் இருந்து ஒரு சிறந்த விஷயம் வெளியானது. என்னுடைய ஆட்டத்திறனில் எந்தவித தவறும் இல்லை என்று கூறிய அவர், என்னை அமைதியாக காத்திருக்கும்படி கூறினார். மேலும், என்னுடைய வலைப் பயிற்சியை பார்வையிட்ட அவர், விரைவில் நான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தப்போவதாக கூறினார். அது இலங்கையில் அல்லது இந்தியா ‘ஏ’ போட்டியில்கூட இருக்கலாம் என்றும் கூறினார். அவரது இந்த வார்த்தை, என் திறமை மீது எனக்கு அதிக நம்பிக்கையை கொடுத்தது” என்றார்.
Link: http://www.maalaimalar.com/2015/08/29213244/Dravid-said-theres-nothing-wro.html
தஞ்சாவூரில் அடிப்படை வசதிகளின்றி இயங்கி வந்த அரசு பள்ளிக்கு சீல் வைப்பு

தஞ்சாவூர் மேலவீதியின் கொங்கணேஷ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில், கொங்கணேஷ்வரர் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் சுமார் 102 மாணவர்கள் பயின்று வந்தனர்.
இந்நிலையில், இப்பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லையென கூறி சோமசுந்தரம் என்பவர் தொடர்ந்த வழக்கில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி பள்ளியை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருப்பினும் பள்ளி தொடர்ந்து செயல்பட்டுவந்த நிலையில், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பள்ளி இயங்கி வருவதாகக் கூறிய இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், பள்ளியிலுள்ள பொருள்களை அப்புறப்படுத்தி சீல்
வைத்தனர்.
பள்ளியின் படித்த மாணவ, மாணவியர்களை அருகில் உள்ள பள்ளியில் சேர்க்கவும், ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
link: http://www.ns7.tv/ta/state-run-school-thanjavur-sealing-access-basic-services.html#ixzz3kBJsIOif
சிகரெட்டை விட மோசமானதாம் இந்த ஊதுபத்தி.. கேன்சர் வரலாமாம்..பீதி கிளப்பும் சீன ஆய்வு!
பெய்ஜிங்: இல்லங்களில் அன்றாடம் பயன்படுத்தும் ஊதுபத்தியிலிருந்து வெளியேறும் நச்சு வாசத்தால் ஏற்படும் கேடு சிகரெட் பிடிப்பவர்களுக்கு ஏற்படும் அபாயத்துக்கு இணையானது என்று புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசனையை வெளிபடுத்தும் ஊதுபத்தியின் புகையினால் அபாயகரமான கேடு விளையக்கூடும் என்று சீன பல்கலைக்கழக ஆய்வு ஒன்று கூறுகிறது.
அகிலம், சந்தன மர தூள்களில் போன்ற பெரும்பாலும் ஊதுபத்திகளில் பயன்படுத்தப்படும் வகைகளைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஊதுபத்தியும் பாதிப்புதான்: 1/6 ஊதுபத்தியும் பாதிப்புதான்: தென் சீன பல்கலைக்கழக ஆய்வு குறித்து ஆராய்ச்சியாளர் ரோங் ஷோ கூறும்போது, "உட்புற சூழலில் பயன்படுத்தும் ஊதுபத்தியால் ஏற்படும் விளைவுகள் குறித்து அதிக அளவில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.
மரபு ரீதியிலான மாற்றங்கள்: 2/6 மரபு ரீதியிலான மாற்றங்கள்: உட்புற சூழலில் இருக்கும் விலங்குகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், ஊதுபத்தியின் ரசாயன குணங்களால் டி.என்.ஏ உள்ளிட்டவைகளின் மரபு ரீதியிலான மாற்றங்கள் நாட்பட்ட அளவில் ஏற்படுவது உறுதியாகி உள்ளது. இதனால் நிச்சயமான மரபணு மாற்றத்தால் ஏற்படும் அபாயம் அதிக அளவில் உள்ளது" என்றார்.
மரபணு மாற்றமும், செல் பாதிப்பும்: 3/6 மரபணு மாற்றமும், செல் பாதிப்பும்: மொத்தம் 64 கலவை உட்பொருட்கள் பயன்படுத்தப்பட்ட ஊதுபத்திகள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. சிகரெட்டால் உண்டாகும் மோசமான விளைவுகளுடன், சிகரெட் ஏற்படுத்தாத மரபணு மற்றும் செல்கள் பாதிப்பும் அதிகம் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
புற்றுநோய் காரணிகள்: 4/6 புற்றுநோய் காரணிகள்: ஆய்வு தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள மியூட்டாஜெனிக்ஸ், ஜெனோடாக்சின்ஸ் மற்றும் சைட்டோடாக்சின்ஸ் ஆகிய நச்சுப் பொருட்கள் புற்றுநோயை விளைவிக்க கூடியவை ஆகும்.
சீன இதழில் வெளியானது: 5/6 சீன இதழில் வெளியானது: சீன பல்கலைக்கழகத்தின் இந்த ஆய்வின் முடிவு சுற்றுச்சூழல் மற்றும் வேதியியல் ஆய்வுக்கூறுகளை வெளியிடும் ஸ்ப்ரிங்கர் என்ற இதழில் வெளியாகி உள்ளது.
Link: http://tamil.oneindia.com/news/international/agarbatti-may-be-harmful-health-234503.html
வியட்நாமில் 18 ஆயிரம் சிறைக் கைதிகளுக்கு விடுதலை
பிரான்ஸிடமிருந்து சுதந்திரம் பெற்ற 70-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறைக் கைதிகளை விடுதலை செய்யவுள்ளதாக வியட்நாம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் புதன்கிழமை கொண்டாடப்படவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தக் கைதிகள் தொகுதி தொகுதியாக விடுதலை செய்யப்படவுள்ளனர்.
கொலைகள், மனிதக் கடத்தல்கள் மற்றும் போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறைவாசம் அனுபவிப்பவர்களும் இவர்களில் உள்ளனர்.
ஆனால், 'அரசியல் குற்றங்களுக்காக' சிறைகளில் உள்ளவர்கள் யாருக்கும் மன்னிப்பு அளிக்கப்படமாட்டாது என்று மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
Link: http://www.bbc.com/tamil/global/2015/08/150828_vietnam_prisoners
மோடி மீது வைத்திருந்த நம்பிக்கையை இளைஞர்கள் இழந்து விட்டார்கள்” - அரவிந்த் கெஜ்ரிவால்
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஒன்றை அறிவித்து இருந்தார். அந்த திட்டத்தின்படி எந்த இடமும் சுத்தமாகவில்லை.
முழு தோல்வி அடைந்து விட்டது. மோடி அரசு மீது வைத்திருந்த நம்பிக்கையை இளைஞர்கள் இழந்து விட்டார்கள். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேசும்போது, வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைத்திக்கும் கருப்பு பணம் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
இப்போது அது பற்றி மோடி வாய்திறப்பதில்லை. மக்களின் கவனத்தை திசை திருப்ப அவர்கள் யோகா பற்றி பேசி திரிகிறார்கள். ஆம் ஆத்மி அரசால் தில்லி மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அங்கு மக்களுக்கு மின்சாரம் மானிய விலையில் மிக குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.
தில்லியில் முன்பு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களில் வெற்றி பெற்றது. இப்போது தில்லியில் சட்டசபை தேர்தல் நடைபெற்றால் 70 இடங்களும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும். அந்த அளவுக்கு தில்லி மக்களிடம் ஆம் ஆத்மி கட்சி செல்வாக்கு பெற்று உள்ளது என்றார்.
Link: http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/youth-losing-faith-in-modi-govt-arvind-kejriwal-in-bihar-115082800042_1.html
நேபாள சிறுவனுக்கு ரியல் மாட்ரிட் ஜெர்சியை அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்த ரொனால்டோ
உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ரியல் மாட்ரிட் அணிக்காக தற்போது விளையாடி வருகிறார். இவர் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுக்கு தனது கையெழுத்திட்ட ரியல் மாட்ரிட் ஜெர்சியை அனுப்பி ஆச்சரியப்படுத்தியுள்ளார். நேபாளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பெரும்பாலான கிராமங்கள் அழிந்தன. அங்கு ஜெடின் என்ற 13 வயது சிறுவன் வசித்து வந்தான். அவன் கால்பந்து மீது தீரான ஆசைக் கொண்டவன். நிலநடுக்கத்தால் ஊரே அழிந்து தெரு ஓரங்களில் மக்கள் வாழ்ந்து வந்தபோதும், இவன் அழிந்து போன தெருவிற்கிடையே கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தான். இதைப்பார்த்த போட்டோகிராபர் ஒமர் ஹவானா, பத்திரிகையாளர் மகாரிடா மோடா ஆகியோர் இந்த சிறுவன் நிலை குறித்து ரொனால்டோவின் ஏஜென்ட் ஜார்ஜ் மெண்டெசிடம் கூறியுள்ளனர். இதன்மூலம் சிறுவன் பற்றி அறிந்த ரொனால்டோ, ஜெட்டினுக்கு தனது கைப்பட எழுதிய ஜெர்சியை அனுப்பி வைத்துள்ளார். அதில் ‘‘ஜெட்டின், நீ வலிமையாக இருக்க எனது வாழ்த்துக்கள்’’ என்று கூறி தன் கையெழுத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து ஜெட்டின் கூறுகையில் ‘‘நான் ஜெர்சியை பெற்றவுடன் ஆச்சரியத்தில் உறைந்து போனேன். ஒரு நாள் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாட விரும்புகிறேன். ஏனென்றால், நான் கால்பந்தை விரும்புகிறேன்’’ என்றான். கால்பந்தில் நட்சத்திர வீரரான திகழ்ந்து வரும் ரொனால்டோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Link: http://www.maalaimalar.com/2015/08/28204737/Cristiano-Ronaldo-Sends-Signed.html
அடுத்த 100 ஆண்டுகளில் கடல் மட்டம் உயரும்: நாசா எச்சரிக்கை
நியூயார்க - பருவநிலை மாற்றம் காரணமாக அடுத்த 100 ஆண்டுகளில் பூமியில் உள்ள கடல் நீர்மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும் என நாசா ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினையாக பருவநிலை மாற்றம் உள்ளது. காடுகளை அழித்து இயற்கையை சீர்குலைக்கும் மனிதர்களால் பூமிக்கு ஆபத்து என விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த 100 அல்லது 200 ஆண்டுகளில் பூமியில் உள்ள கடல் மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும் என நாசா ஆய்வு கூறுகின்றது.
மேலும், இந்த கடல் மட்ட உயர்வு தடுக்க முடியாதது என்றும், அது எவ்வளவு விரைவாக நடைபெறும் என்பதை உறுதி செய்ய முடியாது என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து கொலராடோ பல்கலைக்கழக பேராசிரியரும், இந்த ஆய்வுக்குத் தலைவராகவும் விளங்கும் ஸ்டீவ் நெரெம் கூறுகையில், "கடலில் வெப்பம் அதிகரிப்பதாலும், பனிப் பாறைகள் உருகி கடலில் கலப்பதாலும் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது.
இதனால் கடல் மட்டத்தின் அளவு மூன்று அடியாக அல்லது அதற்கும் மேலாக உயரலாம் என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் அது இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் நிகழுமா அல்லது சிறிது காலம் கழித்து நிகழுமா என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
Link: http://www.thinaboomi.com/2015/08/28/48899.html
abivai