தாம்பரம்: சிட்லப்பாக்கம் பேரூராட்சி சார்பில் மாடித் தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் மகளிர் சுய உதவி குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம், குடியிருப்போர் நலச்சங்கம், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. மாடித் தோட்டம் மூலம் நமக்கு நாமே காய்கறிகள் மற்றும் மலர்கள் வளர்க்கலாம். இதற்கு வீட்டின் மொட்டை மாடி இடம் போதுமானது. மாடித் தோட்டத்தில் சின்னத் தொட்டிகள், மண்பாண்டங்கள், குடங்களின் அடிப்பாகம், பிளாஸ்டிக் தட்டுகள் ஆகியவற்றில் மண் நிரப்பி அதில் நமக்குத் தேவையான கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், தண்டங்கீரை, புதினா, கறிவேப்பிலை, பொரியல் தட்டை, அரைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கன்னி, முளைக்கீரை, புடலை, பாகல், பீர்க்கன் போன்ற காய்கறிகளையும், செண்டு மல்லி, செம்பருத்தி, ரோஜா, கனகாம்பரம் போன்ற மலர்களையும் வளர்க்கலாம். இதனால் சத்தான சுவைமிக்க நஞ்சில்லாத இயற்கை முறையில் அன்றே விளைந்த காய்கறிகளை தினமும் பெறமுடியும் என பயிற்சியில் விளக்கப்பட்டது. முன்னதாக பேரூராட்சி அலுவலக மாடி மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோட்டத்தை பேரூராட்சிகளின் இணை இயக்குநர்கள் மணிமேகலை, மலையாமன் திருடிக்காரி ஆகியோர் திறந்து வைத்தனர். பேரூராட்சி தலைவர் மோகன், செயல் அலுவலர் சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Link: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=79532













0 thoughts on “சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் மாடித் தோட்டம் அமைக்க பயிற்சி ”