தஞ்சை: தஞ்சை மேரீஸ் கார்னரில் உள்ள விஜயா திருமண மண்டபத்தில் சோழமண்டல நாணயவியல் கழகம் சார்பில் 12வது ஆண்டு விழா, 22வது நாணயக் கண்காட்சி தொடக்க விழா ஆகியவை நேற்று நடந்தது.மூத்த இளவரசர் பாபாஜிராஜாபான்ஸ்லே கண்காட்சியை திறந்து வைத்தார். முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி தலைமை வகித்து பேசுகையில், ‘வரலாறு, பண்பாடு இன்றைய தலை முறையினருக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் வளரும் தலைமுறையினர் தங்களது பண்பாட்டை உணர்ந்து நடந்துகொள்வர். இதற்கு இப்படிப்பட்ட கண்காட்சிகள் வழிவகுக்கும்’ என்றார். கண்காட்சி நாளை(9ம் தேதி) வரை நடக்கிறது. கண்காட்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் உருவம் பொறித்த தபால் தலைகள், முன்னாள் அமைச்சர் தயாநிதிமாறன் கடந்த 2006ம் ஆண்டு வெளியிட்ட சந்தனம், மல்லிகை, ரோஜா ஆகிய மணம் வீசும் தபால் தலைகள் இடம் பெற்றிருந்தது.
இதை தவிர தென்நாட்டில் வழக்கில் இருந்த முதல் வகை செம்பு, வெள்ளி, முத்திரை, நாணயங்கள், சங்ககால சேர, சோழர், பாண்டிய மன்னர் கால நாணயம், பல்லவர் கால நாணயம், பிற்கால சேரர், சோழர், பாண்டியர் கால நாணயங்கள், விஜயநகரப்பேரரசு, தென்னக நாயக்க மன்னர் கால நாணயம், தஞ்சை, செஞ்சி, ஆரணி, மராட்டிய மன்னர்கள், திருவாங்கூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை சமஸ்தான மன்னர்கள் கால நாணயம்,வடஇந்திய மற்றும் மொகலாயர் காலத்து நாணயம், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, போர்ச்சுகீசியர், பிரஞ்சு, டச்சுகாரர்கள் நாணயம் ஆகியவை இடம் பெற்றிருந்தது. இதை தவிர சுதந்திர இந்திய நாட்டின் அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை வெளியிட்ட அரியவகை நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், இலங்கை, வங்கதேசம், அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்ட அரிய வகை நோட்டுகள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
Link: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=79383
via http://j.mp/tamil_news













0 thoughts on “தஞ்சை நாணய கண்காட்சியில் நறுமணம் வீசும் தபால் தலைகள்”