தஞ்சாவூரில் அடிப்படை வசதிகளின்றி 20 ஆண்டுகளாக இயங்கி வந்த அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி பூட்டி சீல் வைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மேலவீதியின் கொங்கணேஷ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில், கொங்கணேஷ்வரர் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் சுமார் 102 மாணவர்கள் பயின்று வந்தனர்.
இந்நிலையில், இப்பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லையென கூறி சோமசுந்தரம் என்பவர் தொடர்ந்த வழக்கில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி பள்ளியை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருப்பினும் பள்ளி தொடர்ந்து செயல்பட்டுவந்த நிலையில், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பள்ளி இயங்கி வருவதாகக் கூறிய இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், பள்ளியிலுள்ள பொருள்களை அப்புறப்படுத்தி சீல்
வைத்தனர்.
பள்ளியின் படித்த மாணவ, மாணவியர்களை அருகில் உள்ள பள்ளியில் சேர்க்கவும், ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

link: http://www.ns7.tv/ta/state-run-school-thanjavur-sealing-access-basic-services.html#ixzz3kBJsIOif

0 thoughts on “தஞ்சாவூரில் அடிப்படை வசதிகளின்றி இயங்கி வந்த அரசு பள்ளிக்கு சீல் வைப்பு ”