மும்பை, ஆக.19- நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆராக்கியமாதா பேராலய திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள வசதியாக மும்பையில் இருந்து மேற்கு ரெயில்வே இரு சிறப்பு ரெயில்களையும், மத்திய ரெயில்வே நான்கு சிறப்பு ரெயில்களையும் அறிவித்து உள்ளன. இந்த நிலையில், கொங்கன் ரெயில்வே 6 சுவிதா சிறப்பு ரெயில்களை அறிவித்து உள்ளது. இதன்படி கோவா மாநிலம் வாஸ்கோடா காமாவில் இருந்து வருகிற 27-ந்தேதி(வியாழக்கிழமை) மற்றும் செப்டம்பர் 2-ந் தேதி(புதன்கிழமை) இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 02715) காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மற்றும் செப்டம்பர் 3-ந் தேதி (வியாழக்கிழமை) இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 02716) இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 9.10 மணிக்கு வாஸ்கோடா காமாவை வந்தடையும். வருகிற 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வாஸ்கோடா காமாவில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 02717) மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். வேளாங்கண்ணியில் இருந்து 31-ந் தேதி (திங்கட்கிழமை) இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 02718) இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 9.10 மணிக்கு வாஸ்கோடா காமாவை வந்தடையும். இந்த சிறப்பு ரெயில்கள் இருமார்க்கத்திலும் மஜோர்டா, மட்காவ், கர்வார், கும்டா, பட்கல், குண்டபுரா, உடுப்பி, சூரட்கல், தோக்கூர், மங்களூர் ஜங்ஷன், கசர்காட், கன்னூர், கோழிக்கோடு, சோரனூர் ஜங்ஷன், பாலக்காடு, கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயில்களில் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த தகவல் கொங்கன் ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link: http://www.maalaimalar.com/2015/08/19092811/6-special-trains-between-Goa-V.html













0 thoughts on “கோவா-வேளாங்கண்ணி இடையே 6 சிறப்பு ரெயில்கள்: கொங்கன் ரெயில்வே அறிவிப்பு”