கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூரில் பூச்சிகள் அருங்காட்சியகம் திறக்க முடிவு செய்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் பட்டாம்பூச்சி, வெட்டுக்கிளி உள்பட எல்லா வகையான 1 லட்சத்துக்கும் அதிகமான பூச்சு மாதிரிகள் காட்சிக்காக வைக்கப்படவுள்ளன. இந்தியாவில் தொடங்கப்படும் முதல் பூச்சிகள் அருங்காட்சியகம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பூச்சிகள் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு ரூ.1 கோடி நிதி ஒதுக்கியது. இந்தியாவில் இருந்து சேகரிக்கப்பட்ட பூச்சி மாதிரிகளில் 80% மாதிரிகள் தமிழகத்தில் இருந்தே சேகரிக்கப்பட்டவை ஆகும். தமிழகத்தின் மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளை தொடர்ந்து கேரளா மற்றும் கர்நாடக வனப்பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் பூச்சு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=161935













0 thoughts on “கோயம்புத்தூரில் திறக்கப்படும் இந்தியாவின் முதல் பூச்சிகள் அருங்காட்சியகம்”