BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம்

கனடா நாட்ட்டை சேர்ந்த பிரபல இணையதளம் ஆஷ்லே மேடிசன்.திருமணமானவர்கள் தங்களின் வாழ்க்கைத் துணைக்கு தெரியாமல் யாருடனாவது கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்ள இந்த இணையதளம்  உதவிகரமாக செயல்பட்டு வந்தது.

இந்த இணையதளத்தில் ஆண், பெண் இருபாலரும் சேர்த்து மூன்று கோடியே 20 லட்சம் வாடிக்கையாளர்கள் அங்கத்தினராக உள்ளனர். இவர்கள் அனைவரின் அந்தரங்கத்தையும் பாதுகாத்து வந்தது ஆஷ்லே மேடிசன்.இதற்கென மாத, ஆண்டு சந்தாவும் வசூலித்து வந்த "ஆஷ்லே மேடிஸன்" உயிரே போனாலும் உங்கள் ரகசிய தொடர்புகள் யாருக்கும் தெரியாது என்று வாக்குறுதி வேறு அளித்திருந்தது.

சமீபத்தில் அந்த இணையதளம் ஹேக் செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த டெக்னிலாஜிகா நிறுவனம் ஆஷ்லி மேடிசன் இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை நகரம் வாரியாக வெளியிட்டுள்ளது. இதையடுத்து, 32 கோடி வாடிக்கையாளர்களின் செல்போன் நம்பர் உட்பட திருடிய அனைத்து விவரங்களையும் அந்த ஹேக்கர்கள், இணையதளம் ஒன்றில் வெளியிட்டுள்ளதாக பிரபல தொழில்நுட்ப வார இதழான வொயர்ட் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது. இந்த செய்தி "ஆஷ்லே மேடிஸன்" அங்கத்தினரான ஆண், பெண் வாடிக்கையாளர்களுக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

கடந்த மாதம் இந்த இணையதளத்துக்குள் ஊடுருவிய சில "ஹேக்கர்ஸ்"மேற்கண்ட மூன்று கோடியே 20 லட்சம் வாடிக்கையாளர்களின் பெயர் விபரம், அவர்களில் யார், யார், எத்தனை பேருடன் தொடர்பில் இருந்தனர்? இதற்கான பணப் பரிவர்த்தனை ஆன்லைன் மூலம் எப்படி நடைபெற்றது? உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் சுரண்டல் செய்து விட்டது. இந்த தகவல்களை வைத்து அந்த கும்பல் "ஆஷ்லே மேடிஸன்" நிர்வாகத்தை மிரட்டி வருவதாகவும் தகவல் கசிந்தது.

இந்தியாவில் ஆஷ்லி மேடிசன் இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவோர் பட்டியலில் டெல்லியை சேர்ந்தவர்கள் 38 ஆயிரத்து 620 பேருடன் முதல் இடத்தில் உள்ளனர். மும்பையில் வசிப்போரில் 32 ஆயிரத்து 888 பேர் அந்த இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலம் 2-வது இடத்தை பிடித்துள்ளனர். சென்னையில் 16 ஆயிரத்து 355 பேர் அந்த இணையதளத்தை பயன்படுத்தி வருவதன் மூலம் 3-வது இடத்தை பிடித்துள்ளனர். பெங்களூர் 5-வது இடத்திலும், கொல்கத்தா 6-வது இடத்திலும், புனே 7-வது இடத்திலும் உள்ளது. ஆனால் இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தவில்லை.

Link: www.DailyThanthi.com/News/World/2015/08/25120702/Through-the-internet-In-keeping-secret-lover-3rd-place.vpf


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம்