மீஞ்சூர் அருகே வல்லூர் கிராமத்தில் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து கூட்டு முயற்சியில் அனல் மின் நிலையத்தை தொடங்கியது.
இதில் 3 யூனிட்டுகளில் தலா 500 மெகாவாட் வீதம் மொத்தம் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த 9–ந் தேதி முதல் யூனிட் மற்றும் 3–வது யூனிட்டுக்கு நிலக்கரி கொண்டு செல்லும் கன்லேயர் பெல்ட் அறுந்தது. இதனால் 2 யூனிட்டுகளிலும் சேர்த்து 1000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அங்கு பழுது பார்ப்பு பணிகள் நடந்து வருகிறது. 2–வது யூனிட்டில் மட்டும் 500 மெகாவாட் உற்பத்தி நடைபெற்றது.
இந்த நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 2–வது யூனிட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 500 மெகாவாட் மின்சாரமும் இன்று நிறுத்தப்பட்டது. இதனால் வல்லூர் அனல் மின் நிலையத்தில் 1500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
Link: http://www.maalaimalar.com/2015/08/12135350/vallur-thermal-power-station-1.html













0 thoughts on “வல்லூர் அனல் மின்நிலையத்தில் 1500 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தம்”