குரூப் 1 தேர்வு: 2 லட்சத்து 22 ஆயிரம் பேர் விண்ணப்பம்குரூப்–1 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்தது. 74 பணியிடங்களுக்கு 2 லட்சத்து 22 ஆயிரத்து 771 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.முதலில் முதல் நிலை தேர்வு எழுதவேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின்தேர்வை எழுதுவார்கள். அதிலும் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மெயின்தேர்விலும், நேர்முகத்தேர்விலும் அதிக மதிப்பெண் எடுப்பவர்கள் அதிகாரிகளாக தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.
Link: http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=148677













0 thoughts on “குரூப் 1 தேர்வு: 2 லட்சத்து 22 ஆயிரம் பேர் விண்ணப்பம் ”