புதுடெல்லி,
இந்தியாவின் விமான சேவை நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக இயக்குனராக அஸ்வினி லோகானி நியமிக்கபட்டுள்ளார்.
ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாகியாக இருந்த ரோஹிந்த் நத்தன் கடந்தாண்டு ஓய்வு பெற்றார்.சேவையை கருதி அவருக்கு ஒரு வருடம் பணி நீட்டிப்பு செய்யபட்டது.
அவரது பதவி காலம் நிறைவடைந்தையொட்டி ஏர் இந்தியாவிற்கு புதிய தலைமை நிர்வாக இயக்குனராக அஸ்வினி லோகானி நியமிக்கபட்டுள்ளார்.
அஸ்வினி லோகானி தற்போது மத்திய பிரதேச மாநில சுற்றுலா மேம்பாட்டுக்கழக தலைவராக இருந்து வருகிறார். 1980-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய ரெயில்வே அதிகாரியான அஸ்வினி லோகானி, விரைவில் ஏர் இந்தியா தலைமை நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்ஜெட்டில் ஏர் இந்திய நிறுவனத்திற்கு மத்திய அரசு சுமார் ரூ.2,500 கோடியை ஒதுக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Link: www.DailyThanthi.com/News/India/2015/08/20173159/Ashwani-Lohani-To-Be-New-Air-India-Chief.vpf













0 thoughts on “ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாகியாக அஸ்வினி லோகானி நியமனம் ”