டர்பன்,
தென் ஆப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் சேர்த்தது. கேப்டன் டிவில்லியர்ஸ் 64 ரன்கள் (48 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார். டிவில்லியர்ஸ் புதிய மைல்கல்லை எட்டினார்.
இதுவரை 190 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 182 இன்னிங்சில் களம் இறங்கியிருக்கும் டிவில்லியர்ஸ் 8,045 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 8 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 2002–ம் ஆண்டில் தனது 200–வது இன்னிங்சில் இந்த இலக்கை கடந்ததே சாதனையை இருந்தது. அதனை டிவில்லியர்ஸ் முறியடித்தார். இந்த சாதனை பட்டியலில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (210–வது இன்னிங்ஸ்) 3–வது இடத்தில் உள்ளார்.
Link: www.DailyThanthi.com/Sports/Cricket/2015/08/26225950/Gangulys-record-tivilliyars.vpf













0 thoughts on “கங்குலியின் சாதனையை முறியடித்தார், டிவில்லியர்ஸ்”