BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

உணவு சாப்பிடும் முன்பு தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையும்: ஆய்வில் புதிய தகவல்

வாஷிங்டன், ஆக. 28–

‘உணவு சாப்பிடும் முன்பு தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உடல் எடையை குறைக்க பல்வேறு பலவிதமான சிகிச்சை முறைகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பிர்மிங்காம் பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் ஹெலன் பரேட்டி தலைமையில் ஒரு நூதன ஆய்வு மேற்கொண்டனர்.

உடல் பருமன் ஆனவர்களை உணவு சாப்பிடும் முன்பு ஒரு பாட்டில் தண்ணீர் குடிக்க வைத்து ஆராய்ச்சி நடத்தினர். அதுபோன்று 41 பேரிடம், வயிறு நிரம்ப உணவு சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடிக்க வைத்து 43 பேரிடமும் ஆய்வு நடத்தப்பட்டது.

உணவு சாப்பிடுவதற்கு முன்னும், பின்னும் இது போன்று 12 வாரங்கள் நடை முறைப்படுத்தப்பட்டது.

அவர்களில் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தவர்களின் உடல் எடை 4.3 கிலோ வரை குறைந்து இருந்தது. அதே வேளையில் சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்தவர்களுக்கு வெறும் 1.3 கிலோ எடை மட்டுமே குறைந்து இருந்தது.

இதன் மூலம் சாப்பிடு வதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் உடல் எடை கணிசமாக குறையும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து நிபுணர் ஹெலன் பரேட்டி கூறும்போது, ‘‘உடல் எடையை குறைக்க பலகடுமையான சிகிச்சை முறைகள், உடற்பயிற்சி போன்றவை செய்வதை விட சாப்பிடும் முன்பு தினமும் 3 வேளை தண்ணீர் குடித்தாலே போதும், உடல் எடை தானாக குறைந்து விடும்’’ என்றார்.

Link: http://www.maalaimalar.com/2015/08/28135259/Drink-water-before-eating-weig.html


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “உணவு சாப்பிடும் முன்பு தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையும்: ஆய்வில் புதிய தகவல்