BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

ஆபாச இணையதளங்களை முடக்க இந்திய அரசு நடவடிக்கை

வயது வரம்பு இல்லாமல், யார் வேண்டுமானாலும் பார்க்க கூடிய வகையில் இயங்கி வரும் 857 ஆபாச இணையதளங்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளது.
சிறார்களை பாதுகாக்கவே நடவடிக்கை என்று அரசு கூறுகிறது
அந்த இணைய தளங்களுக்குள் குழந்தைகள் எளிதாக நுழைந்து பார்ப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.
எனினும் இந்த ஆபாச இணையதளங்களை பெரியவர்கள் மட்டும் பார்க்க சிறப்பு அனுமதி பெற இயலும்.
இந்திய அரசாங்கத்தால் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் இணையதங்களை கூட தடுக்க முடியவில்லை என, உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதத்தில் கருத்து வெளியிட்டிருந்தது.
தற்போதும் கூட ஆபாச இணையதளங்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவது உடனடியாக முடியாத ஒன்று என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூறுகின்றன.
ஆபாச தளங்களை முற்றாக முடக்க முடியுமா எனும் கேள்வியும் எழுந்துள்ளது
ஒவ்வொரு இணையதளத்தையும் தனித்தனியாக அடையாளம் கண்டு அவற்றை தடுக்க வேண்டியுள்ளதால் அவற்றை முழுமையாகத் தடை செய்வதற்கு நீண்டகாலம் ஆகும் என இணைய இணைப்புகளை வழங்கும் நிறுவனங்கள் கூறுகின்றனர்.
எனினும் ஆபாச இணையதளங்களை முடக்க நடவடிக்கை எடுக்குமாறு தங்களுக்கு அரசிடமிருந்து அறிவுரை வந்துள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத உயரதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
அதேவேளை தற்போது நடைமுறைப்படுத்தப்படும் தடை என்பது முழுமையானது கிடையாது என்றும், வயதில் மூத்தவர்களால் அந்த இணையதளங்களுக்குள் நுழைய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியக் கலாச்சாரத்தை பேணிக்காக்கும் திட்டத்திற்கும் இது உதவி செய்யும் என்றும் அந்த உயர் அதிகாரி தெரிவித்தார். இது ஒரு தற்காலிக ஏற்பாடு தான் என்றும், நீண்ட காலத்திற்கான கொள்கை முடிவுகள் வகுக்கப்படும் வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அந்த அதிகாரி கூறினார்.

மாற்றுக் கருத்துக்கள்

ஆனால் இது முழுமையான தடையில்லை, பெரியவர்கள் இன்னும் ஆபாச இணையதளங்களை அணுக முடியும் என்று அரசு கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது என்கிறார் பெங்களூருவை தளமாகக் கொண்டு இயங்கும் இணையமும் சமூகமும் எனும் மையத்தைச் சேர்ந்த ப்ராணேஷ் பிரகாஷ்.
இதுவரை இந்தியாவில் இல்லாத வகையில் ஒரே நேரத்தில் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறுகிறார்.
எனினும் ஆபாச இணையதளங்களை முடக்க அரசு எடுத்த நடவடிக்கை சரியே என்கிறார் சென்னை பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறையின் தலைவர் பேராசிரியர் திலகராஜ். இந்திய அரசு இப்படியான நடவடிக்கையை நீண்டகாலம் முன்னரே எடுத்திருக்க வேண்டும் என அவர் கூறுகிறார்.
குற்றங்களுக்கும் ஊடகங்களுக்கும் நெருங்கியத் தொடர்புகள் உள்ளன என அண்மைய ஆராய்ச்சிகள் காட்டுவதாகவும் பேராசிரியர் திலகராஜ் தெரிவித்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகியுள்ள புள்ளிவிவர தகவல்களின்படி, உலகளவில் ஆபாச இணையதள்ங்களுக்குள் நுழைபவர்களின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில உள்ளது.
THANK YOU
BBC TAMIL


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “ஆபாச இணையதளங்களை முடக்க இந்திய அரசு நடவடிக்கை