ஆக்ரா: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் ஆக்ரா வருகின்றனர். இந்நிலையில் தாஜ்மகாலை இரவில் கண்டுகளிக்கும் வகையில் இரவு 8.30 மணி முதல் இரவு 12.30 மணி வரை அரை மணி நேரம் என்ற கணக்கில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பவுர்ணமி, பவுணர்மிக்கு முந்தைய 2 நாட்கள் மற்றும் பவுர்ணமிக்கு பிந்தைய 2 நாட்கள் என 5 நாட்கள் மட்டுமே இரவு நேரத்தில் தாஜ்மகாலை பார்க்க அனுமதிக்கப்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் தாஜ்மகாலை பார்க்க விரும்புபவர்கள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக மத்திய சுற்றுலா துறை அமைச்சர் மகஷே்சர்மா கூறியதாவது, தாஜ்மகாலை இரவு நேரத்தில் பார்க்க விரும்பும் சுற்றுலா பயணிகள் நேரடியாக தற்போது டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டி உள்ளது. இதற்கு பதிலாக தாஜ்மகாலை பார்க்க விரும்பும் சுற்றுலா பயணிகள் அன்று பிற்பகல் 3 மணி வரை ஆன்லைன் மூலமாக டிக்கெட்டை பதிவு செய்துகொள்ளலாம்.அலங்கார விளக்கு நொறுங்கியதுகடந்த புதன்கிழமை, தாஜ்மஹாலின் பிரதான நுழைவு பகுதியின் மேலே பொருத்தப்பட்டிருந்த 60 கிலோ எடை கொண்ட, அலங்கார விளக்கு திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் யாரும் இல்லாததால், பெரும் விபத்து ஏற்படவில்லை. ஆனாலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தொல்பொருள் ஆராய்ச்சித்துறை (ஏஎஸ்ஐ) உத்தரவிட்டுள்ளது. 6 அடி உயரம், 4 அடி அகலம், 60 கிலோ எடை கொண்ட இந்த அலங்கார விளக்கை, கடந்த 1905ம் ஆண்டு லார்ட் கர்சான் என்பவர் பரிசாக அளித்துள்ளார். விளக்கு கீழே விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை.
Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=162948













0 thoughts on “தாஜ்மஹாலை இரவில் பார்ப்பதற்கு ஆன்லைன் டிக்கெட”