செங்கம்: செங்கம் நகரில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் கிழிந்த ரூபாய் நோட்டுகள் வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் இயங்கி வருகிறது. தற்போது அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மற்றும் அரசு ஊழியர், ஒய்வூதியர், விவசாயிகள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்கின்றனர். செங்கம் நகரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் சென்டரில் நேற்று முன்தினம் மாவட்ட கவுன்சிலர் வெங்கட்ராமன் தனது ஏடிஎம் கார்டு மூலம் ரூ. 10ஆயிரம் எடுத்துள்ளார். அதில் 3 நோட்டுகள் கிழிந்த நிலையிலும், ஒட்டப்பட்ட நிலையிலும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து வங்கி ஊழியரிடம் புகார் செய்துள்ளார்.அதற்கு, வங்கிக்கும் ஏடிஎம் மையத்திற்கும் தொடர்பு இல்லை. பணம் வைப்பது தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி அல்லது சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில்தான் புகார் செய்ய வேண்டும் என கூறினாராம். பொதுமக்கள் தங்களது தேவைக்கு ஏற்ப பணம் எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் நோட்டுகள் கிழிந்த நிலையிலும், கள்ள ேநாட்டுகளும் வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாமல் தவிக்கின்றனர். கிழிந்த நோட்டுகளை, வெளியில் கடைகளில் கொடுத்தாலும் அவர்கள் வாங்கி கொள்வதில்லை. இதனால் அவசரத்திற்கு பணம் எடுத்து அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே வங்கி நிர்வாகம் இதுபோன்று நடக்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.
Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=163977













0 thoughts on “ஏடிஎம் இயந்திரத்தில் கிழிந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள்”