BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல்: பதற்றப்படாமல் இருந்தாலே சமாளிக்கலாம்

புதுடெல்லி: தேசிய தலைநகரில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், பதற்றப்படாமல் இருந்தாலே சமாளிக்கலாம் என்கின்றார் மருத்துவ அதிகாரி. டெங்கு காய்ச்சல் மற்றும் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நகராட்சி தலைமை மருத்துவ அதிகாரி எம்.சுந்தர்ராஜன், தினகரன் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி: மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல், அனோடில் என்கிற பெண் கொசுவினால் தான் பரவுகிறது. நம் நாட்டில் பரவும் டெங்கு காய்ச்சல் டைப் 1, டைப் 3 மற்றும் டைப் 5 என்ற 3 வகைப்படும். டெங்கு காய்ச்சல் என்பது சாதாரண வகைகாய்ச்சல் போலத்தான், சரியான முறையில் மருந்துகள் உட்கொண்டால், டெங்குகாய்ச்சலை கூட எளிதில் சமாளிக்கலாம்.காய்ச்சலின் தன்மை, அறிகுறி:பொதுவாக எந்த வகை டெங்குகாய்ச்சலாக இருந்தாலும் 6 நாட்கள் வரை மட்டுமே நீடிக்கும். இதனால் இந்த காய்ச்சலுக்கு 6 நாள் காய்ச்சல் என்ற பெயரும் உண்டு. திடீரென அதிககாய்ச்சல், குளிர் ஏற்படுதல், உடல் வலி, தாங்கமுடியாத அளவு முதுகுவலி, கண்களின் பின்புறம் வலித்தல் ஆகியவை தான் டெங்குகாய்ச்சலின் முக்கிய அறிகுறிகள். இது போன்ற அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், உடனடியாக மருத்துவரை அணுகி, அவரின் அறிவுறைப்படி மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.காய்ச்சலின் பாதிப்பு:நமது நாட்டில் பரவும் 90 சதவீதம் டெங்கு காய்ச்சல், சாதாரண வகை காய்ச்சல் போலதான், எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. மருத்துவரின் அறிவுரைப்படி சரியான மருந்துகள் எடுத்துக் கொண்டால், எந்த பிரச்னையும் ஏற்படாமல் தப்பிக்கலாம். பொதுவாக இந்த காய்ச்சலின் போது, உடலில் உள்ள ரத்த தட்டையணுக்களை உண்டுதான், டெங்கு வைரஸ்கள் பரவும். மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போது, 6 நாட்களில் நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலில் உண்டாகி, தானாகவே காய்ச்சல் சரியாகிவிடும். கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு டெங்கு காய்ச்சல் வந்தால், காய்ச்சலின் தீவிரம் அதிகமாக இருக்கும்.எதிர்கொள்ளும் வழிமுறைகள்:டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டால், பதற்றப் பட கூடாது. மருத்துவரை அணுகி, அவர் ஆலோசனைப் படி மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல், தலைவலி போன்று டெங்குகாய்ச்சலையும் சரியான வகையில் எதிர்கொள்ளாமல், மெடிக்கல் ஷாப்களில் மருந்துகளை வாங்கி உட்கொள்பவர்களின் நிலை தான் மோசமாகிவிடும். காய்ச்சலுக்கு மாத்திரைகளும், உடல்வலிக்கு நிவாரணிகளும் உட்கொள்பவர்களுக்கு, 6 நாட்கள் காய்ச்சல் முடிந்த பிறகு உடலில் பாதிப்புகள் தொடங்கும். ரத்த தட்டையணுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து, மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும். டெங்கு காய்ச்சல் தாக்கினால் பாதிப்புகளை உண்டாக்குவது, தேவையில்லாமல் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் தான்.சிகிச்சை முறைகள்:டெங்கு காய்ச்சல் பாதிப்பில் பிளாஸ்டிக்கல், ஹெம ராட்டிக், இன்டர் நல் பீவர் என்ற 3 வகை உண்டு. இதில் முதல் வகை பாதிப்பிற்கு வீட்டிலிருந்தபடியே, மருத்தவரின் ஆலோசனைப் படி சிகிச்சைகள் மேற்கொள்ளலாம். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க, நீர், பழரசம் இளநீர் போன்ற பானங்களை அதிகம் அருந்த வேண்டும். மற்ற 2 வகையிலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சைகள் மேற் கொள்ளப்படும். ஆட்டுப்பால் குடித்தால், டெங்கு காய்ச்சல் பரவாது என்றும், பாதிப்பு குறையும் என்பதும் முற்றிலும் பொய்யானது.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள் தென்பட்டவுடனே, அதற்கான சோதனைகள் செய்து கொள்ள வேண்டும். சோதனையில் டெங்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டால், நகராட்சியின் சுகாதாரதுறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு அருகில் உள்ள பகுதிகளில் டெங்கு கொசு பரவாமல் தடுக்க, நடவடிக்கை எடுப்பார்கள். மேலும் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டவரின் வீட்டில் உள்ள மற்றவர்களும் சோதனை செய்து கொள்வது நல்லது. டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் வீட்டில் வீணாக உள்ள டயர், பிளாஸ்டிக் போன்ற வற்றில் நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும். டெங்கு கொசுக்கள் முழுவதும் சுத்தமான நீரில் மட்டுமே உருவாகும். எனவே திறந்த வெளியில் மழை நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும். குடிநீர் தொட்டியில் மூடி பொருத்தாமல் இருந்தால், கொசு முட்டையிட வாய்ப்புள்ளது.வீட்டில் கூலர்களில் உள்ள தண்ணீரை அடிக்கடி மாற்ற வேண்டும். ஏசி போன்றவற்றால் தேங்கியிருக்கும் நீரில் சிறிதளவு மண்ணெண்ணெயை ஊற்றுவதன் மூலம் கொசு முட்டையிடுவதை தடுக்கலாம். மழைநீர் தேங்கும் இடங்களில், டெங்கு கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் மீன்களை விடுவதன் மூலமும் கொசு பெருக்கத்தை குறைக்கலாம். மழைக்காலம் தீவிரமாக உள்ளதால், டெங்கு கொசு பாதிப்பு ஏற்படுவது அதிகரிக்கும். காய்ச்சல் தாக்கினாலும் பதற்றப்படாமல், சிகிச்சை மேற்கொண்டாலே எளிதில் மீளலாம் என்கிறார் மருத்துவ அதிகாரி சுந்தர்ராஜன்.

Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=163041



nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல்: பதற்றப்படாமல் இருந்தாலே சமாளிக்கலாம்