தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிராக அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி உறையூர் சாலை ரோட்டில் ருக்மணி தியேட்டர் அருகே உள்ள மதுக்கடைகள் முன்பு இன்று மது குடிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
இதை தொடர்ந்து இன்று காலை முதலே அந்த மதுக்கடை முன்பு ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் கபிலன் தலைமையில் 100–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
இதற்கிடையே மதியம் 12 மணியளவில் சட்டக்கல்லூரி மாணவர் தவமணி தலைமையில் அங்கு வந்த மாணவர்கள் 7 பேர் அருகருகே இருந்த 2 மதுக்கடைகளின் முன்பு மது குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளு–முள்ளு வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Link: http://www.maalaimalar.com/2015/08/05150600/law-school-students-arrested-A.html
via http://j.mp/tamil_news













0 thoughts on “திருச்சியில் மது குடிக்கும் போராட்டம்: சட்டக்கல்லூரி மாணவர்கள் கைது ”