முதல் டெஸ்ட்: இந்திய அணி தோல்வி இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 183, இந்தியா 375 ரன்கள் எடுத்தன. இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 367 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதனையடு்தது 176 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 23 ரன்கள் எடுத்திருந்தது. தவான் (13), இஷாந்த் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.சனிக்கிழமை நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 112 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி, தோல்வியடைந்தது. ஆரோன் (1) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ஹெராத் 7 விக்கெட் வீழ்த்தினார்.
Link: http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=148969













0 thoughts on “முதல் டெஸ்ட்: இந்திய அணி தோல்வி”