சென்னை: சென்னை- குவைத் விமானம் இன்று எந்திரக் கோளாறால் சென்னை வந்தடையாத காரணத்தினால் அப்பயணம் ரத்து செய்யப்பட்டது. அதனால் விமானத்திற்கு காத்திருந்த 245 பயணிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். குவைத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு அதிகாலை 3.30 மணிக்கு விமானம் ஒன்று தினசரி வரும். அந்த விமானம் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு மீண்டும் குவைத் செல்லும். ஆனால் இன்று அதிகாலை 3.30 மணிக்கு அந்த விமானம் குவைத்தில் இருந்து சென்னை வரவில்லை. அதிகாலை 5 மணிக்கு அந்த விமானத்தில் புறப்பட்டு செல்வதற்காக 245 பயணிகள் காத்திருந்தனர். விமானம் வராததால் அவர்கள் விமான நிலையத்திலேயே தவித்தனர். இதற்கிடையே அந்த விமானம் எந்திர கோளாறு காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்துக்காக காத்திருந்த பயணிகள் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். இன்று மாலையில் அவர்கள் மாற்று விமானம் மூலம் குவைத் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
http://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-kuwait-flight-cancelled-245-passengers-ready-board-232845.html














0 thoughts on “சென்னை- குவைத் விமானம் எஞ்சின் பிரச்சினையால் ரத்து; 245 பயணிகள் அவதி! ”