சின்சினாட்டி டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தி ரோஜர் ஃபெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் ஏடிபி டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் உலகத் தரவரிசையில் முதலிடத்திலுள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச் - ரோஜர் ஃபெடரர் மோதினர். இதில் 7-6 (7/1), 6-3 என்ற செட் கணக்கில் ஃபெடரர் வெற்றி பெற்று சின்சினாட்டி டென்னிஸ் சாம்பியன் ஆனார். இதன் மூலம் 7-ஆவது முறையாக சின்சினாட்டி ஏடிபி டென்னிஸ் மகுடத்தை கைப்பற்றிய ரோஜர் ஃபெடரர் தரவரிசையில் 2-ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளார்.
சானியா ஜோடி தோல்வி:மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் சானியா மிர்ஸ - மார்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி, போட்டித் தரவரிசையில் இடம்பெறாத சீன தைபே சகோதரிகளான ஹா சிங் சான் - யங் ஜன் சான் ஜோடியை எதிர்கொண்டது. ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில், 4-6, 6-0, 6-10 என்ற செட் கணக்கில் சானியா - ஹிங்கிஸ் ஜோடிதோல்வியடைந்தது.
Link: http://www.dinamani.com/sports/2015/08/24/சின்சினாட்டி-டென்னிஸ்-ரோஜர/article2990662.ece













0 thoughts on “சின்சினாட்டி டென்னிஸ்: ரோஜர் ஃபெடரர் சாம்பியன்”