மும்பை - இந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்கிழமை 1 சதவீதம் அளவுக்கு உயர்ந்து முடிந்தது. சர்வதேச ரூபாய் நோட்டுகளில் உள்ள நிலைத்தன்மை மற்றும் சர்வதேச சந்தையில் உள்ள வாங்கும் போக்கு ஆகிய காரணங்களால் பங்குச்சந்தை உயர்ந்தது. சரக்கு மற்றும் சேவை வரியை நிறைவேற்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததன் காரணமாகவும் இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்தன.
சென்செக்ஸ் 291 புள்ளிகள் உயர்ந்து 26032 புள்ளியிலும், நிப்டி 72 புள்ளிகள் உயர்ந்து 7881 புள்ளியிலும் முடிந்தது. மிட்கேப் குறியீடு 2 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 1 சதவீதமும் உயர்ந்து முடிந்தது. ரியால்டி குறியீடு 7 சதவீதம் வரை உயர்ந்தது. அதனை தொடர்ந்து மெட்டல், ஆயில் அண்ட் கேஸ், ஆட்டோ, வங்கி ஹெல்த்கேர் ஆகிய துறை குறியீடுகளும் உயர்ந்து முடிந்தன. ஐடி குறியீடு 0.50 சதவீதம் சரிந்து முடிந்தது.
இரு வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த ரூபாய் மதிப்பு செவ்வாய்கிழமை 54 பைசா உயர்ந்தது. வர்த்தகத்தின் இடையே 77 பைசா வரை ரூபாயின் மதிப்பு உயர்ந்தது. கடந்த இரு வருடங்களில் ஒரே நாளில் அதிகபட்சம் உயர்வது இப்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
Link: http://www.thinaboomi.com/2015/08/26/48825.html













0 thoughts on “இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் 291 புள்ளி உயர்வு”