பணக்காரர்கள் வளர்க்கும் நாய்களுக்காக மசாஜ் வசதியுடன், 20 ஏசி அறைகள் கொண்ட சிறப்பு ஹோட்டல் ஒன்று ஜெய்ப்பூரில் திறக்கப்பட்டுள்ளது.
இங்கு மசாஜ் வசதியுடன் நீச்சல் குளம் அமைக்கப்படுள்ளது.
தாங்கள் மிக ஆசையாக வளர்க்கும் நாய்களும், தங்களது பிள்ளைகள் போலத்தான் என்பதை காட்டும் வகையிலும், நாய்களும், மனிதர்களைப் போல அனைத்து வசதிகளையும் அனுபவிக்கும் வகையில் இந்த ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாய் சந்தையின் தலைவர் விரென் ஷர்மா கூறியுள்ளார்.
ஒரு நாளைக்கு உணவு மற்றும் மசாஜ், தங்கும் அறைக்கு நாய் ஒன்றுக்கு ரூ.599 கட்டணமாக வசூலிக்கப்படும். இங்கு பல்வேறு வகையான உணவு வகைகளும் பரிமாறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link: http://www.dinamani.com/india/2015/08/05/ஜெய்ப்பூரில்-புதுமை-நாய்கள/article2958975.ece
via http://j.mp/tamil_news













0 thoughts on “ஜெய்ப்பூரில் புதுமை: நாய்களுக்கு மசாஜ் வசதியுடன் கூடிய சிறப்பு ஹோட்டல் ”