பச்சையப்பன் கல்லூர் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி.
சென்னை அமைந்தகரையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
அந்த டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய கல்லூரி மாணவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் திடீரென டாஸ்மாக் கடையில் உள்ள மதுபாட்டில்களை அடித்து நொறுக்கினர். டாஸ்மாக் கடையை கல்வீசி தாக்கி, அடித்து நொறுக்கும்போது போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது மாணவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
மாணவர்களை விரட்டி அடிக்க, போலீஸார் தடியடி நடத்தினர். மாணவர்களைப் பிடித்து அடித்து, பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டனர்.
அப்போது, மாணவர்களை மீட்பதற்காக மாணவிகள் போலீஸாரிடம் வாக்குவாதம் நடத்தினர். போலீஸார் தொடர் தடியடி நடத்தியபோது, ஒரு மாணவி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர், மாணவிகளை இழுத்து தள்ளிவிட்டு மாணவர்களை சரமாரியாக போலீஸார் அடித்தனர். குண்டுக்கட்டாக மாணவர்களைத் தூக்கி போலீஸ் வேனில் ஏற்றினர்.
புத்தகத்தை படிக்கவா? சாராயத்தை குடிக்கவா? என்று மாணவிகள் தொடர்ந்து முழக்கமிட்டனர்.
இதைத் தொடர்ந்து, ஹாரிங்டன் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை மூடப்பட்டது. அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸார் நடத்திய தடியடி தாக்குதலால் பல மாணவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.
இந்த போராட்டக் களேபரங்களுக்கு இடையில், சில மாணவர்கள் டாஸ்மாக் கடையில் இருந்த மது பாட்டில்களை எடுத்துச் சென்றனர்.
The Hindu













0 thoughts on “பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் – போலீஸ் கடும் மோதல்”