கராச்சி : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி தான் கிரிக்கெட் மூலம் சம்பாதித்த பணத்தை பெரும்பாலும் நாட்டு நலனுக்காகவே செலவிட்டு வருகிறார். கிராமங்களுக்கு சாலை போடுவது, புற்றுநோய் மருத்துவமனை கட்டுவது போன்ற அறப்பணிகளில் அப்ரிடி செய்துள்ளார். கராச்சி நகரில் செயல்பட்டு வரும் உடல் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான 'தாருல் சுகான்' என்ற அமைப்புக்கு நேற்று சாகித் அப்ரிடி சென்றார். அங்கு மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவிட்ட அப்ரிடி, அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார். மேலும் அந்த குழந்தைகளின் நலனுக்காக ரூ. 20 லட்சம் பாகிஸ்தான் பணத்தையும் நிதியுதவியாக சாகித் அப்ரிடி அளித்தார்.
Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=160101
via http://j.mp/tamil_news













0 thoughts on “மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ரூ. 20 லட்சம் உதவி செய்த சாகித் அப்ரிடி”