ஆகஸ்ட் 23ல் சூப்பர் நேஷன் பார்ட்டி துவக்கவிழா பொது மக்களின் அடிப்படை தேவைகளை கவனத்தில் கொண்டு அதை செயல்படுத்தும் விதத்தில் பல திட்டங்களை வகுத்து, ஒத்த சிந்தனையுள்ள கரைபடியாத கரங்களை ஒன்றிணத்து சூப்பர் நேஷன் பார்ட்டி என்ற இந்த புதிய கட்சி துவங்க உள்ளோம்.சாதிமத அரசியல் செய்யமாட்டோம், சாதிக்கும் செயல்களை மட்டுமே செய்வோம். விளம்பரத்திற்காக பிறரை விமர்சிக்கமாட்டோம். மக்கள் நேரத்தை வீணடிக்கும் வேலைகளை செய்யமாட்டோம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளோம்.இயக்கத்தின் துவக்கவிழா வருகின்ற 23 ஆகஸ்ட் அன்று சிப்பாய் புரட்சி நடத்த மண்ணாம் வேலூர் மாவட்டத்தில் எங்கள் அரசியல் புரட்சியை துவக்க உள்ளோம் என்று கூறியுள்ளனர்.படங்கள் - அசோக்.
Link: http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=149303













0 thoughts on “ஆகஸ்ட் 23ல் சூப்பர் நேஷன் பார்ட்டி துவக்கவிழா (படங்கள்) ”